பழம்பெரும் நடிகர் எம்.என்.நம்பியார் மனைவி ருக்மணி இன்று மரணமடைந்தார்.
அவரது மறைவுக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார்.
மறைந்த பழம்பெரும் நடிகர் எம்.என்.நம்பியா ரின் மனைவி ருக்மணி நம்பியார் (82). இவர் கடந்த 15 நாட்களாக உடல்நலக் குறைவு காரணமாக, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்� �ை பெற்று வந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்றிரவு 8.30 மணிக்கு ருக்மணி இறந்தார்.
அவரது உடல் கோபாலபுரத்தில் உள்ள இல்லத்துக்கு நள்ளிரவு 12 மணிக்கு கொண்டு வரப்பட்டது.
நம்பியார் -ருக்மணி தம்பதியருக்கு 2 மகன், ஒரு மகள். மூத்த மகன் சுகுமாரன் நம்பியார் மாரடைப்பால் கடந்த ஜனவரி மாதம் உயிரிழந்தார். இவர் பா.ஜ.வில் முக்கிய தலைவர்களில் ஒருவராக � ��ருந்தார். மற்றொரு மகன் மோகன் நம்பியார் தொழிலதிபராக உள்ளார். மகள் சினேகா சென்னையில் வசித்து வருகிறார். ருக்மணியின் இறுதிச் சடங்கு, பெசன்ட் நகர் மயானத்தில் இன்று மாலை 4 மணி அளவில் நடக்கும் என்று உறவினர்கள் தெரிவித்தனர்.
ருக்மணி மறைவுக்கு முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி:
பழம் பெரும் திரைப்பட நடிகர் மறைந்த எம்.என். நம்பியார் மனைவி ருக்மணி நம்பியார் உடல் நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி நேற்று இரவ� �� இயற்கை எய்தினார் என்ற செய்தியறிந்து ஆற்றொணாத் துயரமும், மன வேதனையும் அடைந்தேன்.
ருக்மணி நம்பியாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தினையும் தெரிவித்துக் கொள்வதோடு, அன்னாரது ஆன்மா இறைவனின் நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Post a Comment