தமிழக சட்டசபையில் நேற்று நடைபெற்ற சமூக நலம், சத்துணவு மற்றும் மாற்றுத் திறனாளிகள் நலத் துறை மானியக் கோரிக்கையின்போது சத்துணவுத் திட்டம் கொண்டு வந்தது காமராஜரா, எம்.ஜி.ஆரா என்பது பற்றி காரசார விவாதம் நடந்தது.
தேமுதிக உறுப்பினர் கே.தமிழழகன் பேசும்போது வறுமையினால் படிக்காமல் இருந்த குழந்தைகளைப் பள்ளிக்கு வரவழைப்பதற்காக காமராஜர் மதிய உணவுத் திட்டத்தை கொண்டு வந்தார் என்றார்.
அமைச்சர் பா.வளர்மதி அதற்கு பதிலளித்து பேசிய போது, தனியார் உதவியுடன் குறிப்பிட்ட பள்ளிகளில் மட்டுமே காமராஜர் ஆட்சியில் மதிய உணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டது. எம்.ஜ� �.ஆர். ஆட்சிக் காலத்தில்தான் 12-ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களுக்கும் சத்துணவுத் திட்டம் தொடங்கப்பட்டது என்று கூறினார்.
அப்போது குறுக்கிட்ட காங்கிரஸ் உறுப்பினர் என்.ஆர். ரங்கராஜன், காமராஜர் ஆட்சிக் காலத்திலேயே சுமார் 28 ஆயிரம் பள்ளிகளில் மதிய உணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டதாகவும், அந்தத் திட்டத்தைதான் எம்.ஜி.ஆர். விரிவுபடுத்தியதாகவும் கூறினார்.
இம்முறை அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, ஆர். வைத்திலிங்கம், பா.வளர்மதி ஆகியோர், � �காமராஜரின் மதிய உணவுத் திட்டத்துக்கும், எம்.ஜி.ஆரின் சத்துணவுத் திட்டத்துக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை. அமெரிக்காவில் இருந்த வந்த கோதுமை, பால் பவுடர் ஆகியவற்றைக் கொண்டு ஒரு சில இடங்களில் மட்டுமே காமராஜர் ஆட்சியில் மதிய உணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டது. காமராஜர் மதிய உணவுத் திட்டத்தைக் கொண்டு வருவதற்கு முன்பே நீதிக்கட்சி ஆட்சியில் சென்னை மாநகரில் சில பள்ளிகளில் மதிய உணவு வழங்கப்பட்டது' என்றனர்.
உடனே சட்டசபை காங்கிரஸ் கட்சித் தலைவர் கே. கோபிநாத், 'மதிய உணவுத் திட்டத்தைத் தொடங்கியவர் காமராஜர். அதனை விரிவுபடுத்தியவர் எம்.ஜி.ஆர்.' என்றார்.
இறுதியில் பேரவைத் தலைவர் டி.ஜெயகுமார், 'எம்.ஜி.ஆர். கொண்டு வந்த சத்துணவுத் திட்டத்தைப் பின்பற்றி மற்ற மாநிலங்களிலும் இந்தத் திட்டத்தை செயல்படுத்துமாறு உச்ச நீதிமன்ற� �் அறிவுறுத்தியுள்ளது. எம்.ஜி.ஆரின் சத்துணவுத் திட்டத்துக்கு ஈடு இணையான திட்டம் எதுவும் இல்லை' என்று முதல்வர் ஜெயலலிதா 2011 ஆகஸ்டில் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் பேசியதை அவைக் குறிப்ப� �லிருந்து படித்துக் காட்டி விவாதத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
Post a Comment