சித்திரைத் திருநாள் - தமிழ் புத்தாண்டுக்கு தொலைக்காட்சிகள் போட்டி போட்டுக் கொண்டு புதிய படங்களை ஒள� ��பரப்புகின்றன.
கலைஞர் டிவி சித்திரை திருநாள் சிறப்புப் படம் என்ற பெயரில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் சிவாஜி - த பாஸ் படத்தை ஒளிபரப்புகிறது.
சன் டிவிக்கு இது 19வது ஆண்டு என்பதால் சிறப்புத் திரைப்படமாக விக்ரம் நடித்த தெய்வத் திருமகள் படத்தை ஒளிபரப்புகிறது. மாலை 6 மணிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினியின் மெகா ஹிட் படம் சந்திரமுகி ஒளிபரப்பாகிறது. சூர்யா நடித்த அயன் படமும் இந்த சேனலில் ஒளிபரப்பாகிறது.
ஜெயா டிவி தன் பங்குக்கு, விஜய் நடித்த வேலாயுதம் படத்தை ஒளிபரப்புகிறது. இந்தப் படம் கடந்த தீபாவளிக்கு வெளியானது.
ராஜ் டிவியில் ராவணன், தெனாலி, அடிமைப்பெண் போன்ற படங்கள் ஒளிபரப்பாக உள்ளன. விஜ� �் டிவியில் முருகதாஸ் தயாரிப்பில் உருவான எங்கேயும் எப்போதும் படம் ஒளிபரப்பாகிறது.
இந்த சேனல்களின் சினிமா யுத்தத்தைச் சமாளிக்க மற்ற சேனல்களும் தங்களால் முடிந்த அளவு போட்டி போட்டுக் கொண்டு படங்களை ஒளிபரப்ப தயாராகின்றன.
Post a Comment