இந்தியா-இலங்கை கடற்பகுதியில் கண்காணிப்பை தீவிரப்படுத்தும் வகையில், புதிய ஆளில்லா உளவு விமானப் படையை இந்தியா ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளியில் நிறுவியுள்ளது. இந்த விமானப் படையில் முதல் கட்டமாக 3 ஆளில்லா விமானங்கள் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்படும். கடல் பகுதியை மிகத் துல்லியமாக படம்பிடித்துத் தரும் திறன் கொண்டதாக இந்த விமானங்கள் உள்ளன.
இலங்கையில் சீனத் தலையீடுகள் அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து இந்தியாவின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ள நிலையிலேயே, இந்தியா இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாகத் தெர ிகிறது. மேலும் சமீபத்தில் ஜெனீவாவில் நடந்த ஐ.நா.வின் மனித உரிமைகள் மாநாட்டில், இலங்கைக்கு எதிராக அமெரிக்கா மனித உரிமை மீறல் தீர்மானம் கொண்டு வந்தது.
அவ்விவகாரத்தில் சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் இலங்கைக்கு ஆதரவளித்தன. ஆனால் இந்தியா இலங்கைக்கு எதிராக வாக்களித்தது. அதனால் அதிர்ச்சி அடைந்த இலங்கை, இந்தியாவுக்கு மறைமுக எச்சரிக்கைகளை விடுத்து வந்தது. இந்திய அரசின் தற்போதைய நடவடிக்கைக்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்.
Post a Comment