இந்தியாவிலேயே எய்ட்ஸ் � �ோயைக் கட்டுப்படுத்துவதில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளதாக, தமிழ்நாடு எய்ட்ஸ் சங்க திட்ட இயக்குனர் மருத்துவர் மோகன்தாஸ் தெரிவித்துள்ளார்.
கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் எய்ட்ஸ் பாதிப்பு விகிதம் 0.25 சதவீதமாகக் குறைந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். 2001ல் 1.31 ஆக இருந்த எய்ட்ஸ் பாதிப்பு விகிதம், 2006ல் 0.38 ஆகக் குறைந்திருந்தது குறிப்பிடத� �தக்கது. 2012ம் ஆண்டு புள்ளிவிவரப்படி தமிழ்நாட்டில் 2 லட்சத்து 18 ஆயிரம் பேருக்கு, எய்ட்ஸ் நோய்க் கிருமியான எச்.ஐ.வி தொற்றியுள்ளது எனவும் மோகன்தாஸ் கூறியுள்ளார்.
எய்ட்ஸ் விழிப்புணர்வு பிரச்சார சிவப்பு ரிப்பன் ரெயில், இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு எய்ட்ஸ் நோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.
இந்த ரெயில் இம்மாதம் 9ம் தேதி முதில் 30ம் தேதி வரை தமிழ்நாட்டில் பயணம் மேற்கொண்டு பிரச்சாரம் செய்ய உள்ளது. மேலும் சென்னை, வேலூர், திண்டுக்கல், கன்னியாகுமரி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் இந்த ரெயில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது.
Post a Comment