புதுக்கோட்டை தொகுதியில் அ.தி.மு.க கூட்டனியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிட்டு 3101 வாக்குகள் வித� �தியாசத்தில் வெற்றி பெற்ற எஸ்.பி. முத்துக்குமரன் கடந்த ஏப்ரல் 1ந் தேதி அன்னவாசல் அருகே கார் விபத்தில் மரணம் அடைந்தார்.
அந்த இடத்திற்கான இடைத்தேர்தலில் அ.தி.மு.க தலைமை மீண்டும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கே வாய்ப்பு தரும் என்று தோழர்கள் நினைத்திருந்தனர். கட்சி தலைமையும் அ.தி.மு.க பொது செயலாளர் ஜெயலலிதாவை சந்தித்து ஆதரவு கேட்க நேரம் கேட்டிருந்தனர்.
ஆனால் சி.பி.ஐ தலைமையை சந்திக்க விரும்பாத ஜெயலலிதா தேர்தல் தேதி அறிவிக்கும் முன்பே தனது அ.தி.மு.க சார்பில் புதுக்கோட்டை மன்னர் குடும்பத்தை சேர்ந்த நகர சேர்மன் கார்த்திக் தொண்டமான் வேட்பாளராக போட்டியிடுவார் என்று அறிவித்துவிட்டார்.
இதனால் தோழர்களும் தொகுதி மக்களும், முத்துக்குமார் விசுவாசிகளும் மனம் புன்பட்டனர். அ.தி.மு.க வேட்பாளர் அறிவிப்பு வந்த நாளில் மாலையில் இடைத் தேர்தல் ஜூன் 12 ந் தேதி நடக்க� �ம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இந்த நிலையில் சென்னையில் மாநில குழுவை கூட்டிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முத்துக்குமார் மனைவி சுசிலாவை வேட்பாளராக நிறுத்தி அதற்கு அ.தி.மு.க அல்லாத தி.மு.க, தே.மு.தி.க, மார்க்சிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், பா.ம.க. மற்றும் இதர கட்சிகளை ஆதரவு கேட்பார்கள் என்று தோழர்களும் மற� ��ற கட்சிகளும் நினைத்திருந்தனர்.
ஆனால் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியன், சி.பி.ஐ இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை என்று அறிவித்து விட்டார்.
இந்த அறிவிப்பால் மேலும் கொதிப்படைந்தனர் அடிமட்ட தோழர்கள். இந்த நிலையில் முத்துக்குமரன் படத்திறப்பு விழா அவரது சொந்த கிராமமான நெடுவாசலில் நடந்தது. இந்த விழாவில் கலந்து கொண்ட முன்னாள் எம்.பி. ராஜா பரமசிவம் (தி.மு.க) பேசும்போது, முத்துக்குமார் குடும்பத்தில் அல்லது அவரது மனைவியை தேர்தலில் வேட்பாளராக நிறுத்தியிருந்தால் தி.மு.க வேட்பாளர் நிறுத்த மாட்டார்கள் என்பதை எங்கள் தலைவர் சொன்னார் அதை தோழர்கள் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்று பேசினார். இந்த பேச்சு அப்போதே சலசலப்பை ஏற்படுத்தியது.
அதன் பிறகு 30ந் தேதி மாலை 7 மணிக்கு தி.மு.க புதுக்கோட்டை தொகுதி பொருப்பளர்களுடன் சென்னை அறிவாலயத்தில் கலந்தாலோசணை நடத்திய கலைஞர் தி.மு.க பேட்டியிடாது என்று அப்போது சொன்னவர். அதன் பிறகு 3 ந் தேதி அறிவிப்பாகவும் வெளியிட்டார்.
கலைஞரின் இந்த அறிவிப்பு தி.மு.க தொண்டர்களையும் கவலையடைய செய்துள்ளது. தோல்வி பயத்தில் தி.மு.க போட்டிக்கு வரவில்லை என்று அ.தி.மு.க வினர் பேசுவார்களே என்றும் கவலைப்பட்டனர். தலைவர் கலைஞர் ஏன் இந்த முடிவை அறிவித்தார். இதுவரை எந்த இடைத் தேர்தலையும் புறக்கணித்தது � �ல்லையே புதுக்கோட்டையில் மட்டும் ஏன் புறக்கணிக்க வேண்டும் என்கின்றனர்.
அப்படியானால் தி.மு.க புதுக்கோட்டை இடைத்தேர்தலில் யாரை ஆதரிப்பது? கட்சி தலைமை யாரை ஆதரிக்க சொல்கிறது? என இன்னும் எதையும் கட்சி தலைமை சொல்லாமல் இருப்பது தி.மு.க தொண்டர்களை கவலைப்பட செய்துள்ளது.
ஆனால் விபரம் அறிந்த பல தி.மு.க புள்ளிகள்.. எங்கள் தலைவர் கலைஞர் ஏதோ பெரிய திட்டம் வைத்துக் கொண்டுதான் இந்த முடிவை அறிவித்தள்ளார். அதாவது இடைத்தேர்தலில் தே.மு.தி.க வேட்பாளரை மறைமுகமாக ஆதரிக்க வேண்டும். இந்த மறைமுக ஆதரவு மூலம் எதிர் வரும் எம்.பி தேர்தலுக்கு த� �.மு.தி.க வை தி.மு.க கூட்டனிக்கு கொண்டு வரும் எண்ணம் இருப்பதாக தான் தெரிகிறது என்று கூறுகின்றனர்.
ஆனால், டெல்லி சி.பி.ஐ தரப்பு தலைமை, கலைஞரிடம் பேச்சு நடத்துகிறது. தமிழக சி.� �ி.ஐ முடிவை மாற்றி வேட்பாளர் அறிவித்தால் தி.மு.க ஆதரித்து எங்கள் வேட்பாளரை வெற்றி பெற வைக்க வேண்டும் என்று பேசி வருவதாகவும் தோழர்கள் மத்தியில் கூறுகின்றனர்.
ஆனாலும் தி.மு.க தலைமை எந்த முடிவை அறிவிக்கப் போகிறது என்பது போக போகத்தான் தெரியும்.
Post a Comment