பாகிஸ்தானின், பஜாவுர் நகரில் � ��க்கள் நெருக்கம் மிகுந்த பகுதியில் பொருள்கள் வாங்குவதற்காக ஒரு கடையில் பாதுகாப்பு அதிகாரிகள் நின்று கொண்டிருந்தனர். அப்போது திடீரென அங்கு வந்த தற்கொலைப்படை தீவிரவாதி ஒருவன், தன் உடலில் கட்டப்பட்டிருந்த வெடிகுண்டை வெடிக்க செய்தான்.
இந்த திடீர் தாக்குதலில் பொதுமக்கள் 20 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் காயமடைந்த 60 க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காயமடைந்தோரில் பெரும்பாலானோரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என மருத்துவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதியின் உடல் பாகங்கள் சிதறிய நிலையில் கண்டெடுக்கப்பட்டன. அவனுக்கு 14 முதல் 17 வயது வரை இருக்கலாம் என சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறியுள்ளனர்.
பாதுகாப்பு படை அதிகாரிகளை குறிவைத்து, இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப� �பேற்கவில்லை.
இதே பஜாவுர் நகரில் நேற்று நடந்த இரண்டு குண்டுவெடிப்பு சம்பவங்களில், பாதுகாப்பு அதிகாரி ஒருவர் உள்பட 5 பேர் பலியாயினர் என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment