வழக்கறிஞரும், மூத்த காங� ��கிரஸ் தலைவர்களில் ஒருவருமான அபிஷேக் சிங்வி தொடர்பான சி.டி.யை வெளியிட்ட அபிஷேக் சிங்வியின் முன்னாள் டிரைவர் முகேஷ் லால் மீது நடவடிக்கை எடுக்குமாறு டெல்லி பார் கவுன்சிலுக்கு உத்தரவிடக்கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த பிரச்சினையில் அபிஷேக் � �ிங்வி மற்றும் அவரது முன்னாள் டிரைவர் முகேஷ் லால் ஆகியோர் சமரசமாக பேசி பிரச்சினையை தீர்த்துக்கொள்வதாக கடந்த 19-ம் தேதி கோர்ட்டில் தெரிவித்துள்ளனர். மேலும், அந்த சி.டி.யை வைத்துள்ள ஊடகங்கள், அதை கொடுத்தவரிடமே திருப்பி கொடுத்துவிடுவதாக கோர்ட்டில் தெரிவித்துள்ளன.
எனவே, இந்த வழக்கு விஷயத்தில் ஏற்கனவே நீதிமன்றம் உத்தரவிட்டு இருப்பதால� ��ம், வழக்கறிஞர் ஒருவரின் வேலையாள் மீது நடவடிக்கை எடுக்க பார் கவுன்சிலுக்கு அதிகாரம் இல்லை என்பதாலும் இந்த பொது நல வழக்கு தள்ளுபடி செய்யப்படுவதாக நீதிபதிகள் அறிவித்தனர்.
Post a Comment