மது அருந்தாத இளைஞர்களுக்கு பரிசு வழங்கப்படும் என சென்னை மேயர் சைதை துரைசாமி அறிவித்துள்ளார்.
கரூர் மாவட்டம் தும்பிவாடியில் ஸ்ரீ மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது. இந்த திருவிழாவில் மண்ணின் மைந்தரும், சென்னை மேயருமான
சைதை துரைசாமி கலந்து கொண்டு பேசியதாவது,
கிராமப்புறங்களில் உள்ள இளைஞர்கள் சமுதாய பணியாற்ற முன்வர வேண்டும். அதற்கு முதலில் குடிப்பழக்கத்தை ஒழிக்க வேண்டும்.
கிராமங்களில் உள்ள இளைஞர்கள் குடிப்பழக்கத்துக்கு ஆளானால் மதிப்பு குறையும், சிந்தனைகள் சிதறும், நற்பண்புகளையும் ஒழுக்கத்தையும் கடைப்பிடிக்க முடியாது. இதனால் வாழ்க்கையில் லட்சியத்தை அடைய முடியாது. எனவே தான் குடிப்பழக்தை அறவே ஒழிக்க வேண்டும் என்று கூறுகின்றேன்.
இன்று முதல் அடுத்தாண்டு வரை குடிக்காத இளைஞர்களுக்கு பரிசு வழங்கப்படும். குடிப்பழக்கம் இல்லாத கிராமமாக தும்பிவாடி மாற வேண்டும். தும்பிவாடி மட்டும் அல்ல தமிழகமும் அது போல மாற வேண்டும். படிக்க முடியாத நிலையில் உள்ள மாணவ, மாணவிளுக்கு அறக்கட்டளை மூலம் உதவி செய்யப்படும் என்றார்.
Post a Comment