ஐபிஎல் போட்டித் தொடரின� � 33-வது லீக் ஆட்டம் மொகாலியில் நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் டேவிட் ஹஸ்ஸி தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும், ஹர்பஜன்சிங் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின. காயம் காரணமாக இன்றைய போட்டியிலும் கில்கிறிஸ்ட் இடம் பெறவில்லை.
பஞ்சாப் அணி இதுவரை தான் ஆடிய 7 ஆட்டங்களில் 3 வெற்றிகளையும், 4 தோல்விகளையும் பெற்று புள்ளிப்பட� �டியலில் எட்டாம் இடத்தில் உள்ளது. மும்பை அணி இதுவரை தான் ஆடிய 6 ஆட்டங்களில் 3 வெற்றிகளையும், 3 தோல்விகளையும் பெற்று புள்ளிப்பட்டியலில் ஏழாம் இடத்தில் உள்ளது. இந்த சீஸனில் மும்பை அணியும் பஞ்சாப் அணியும் மோதிய போட்டியில் பஞ்சாப் அணி வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆட்டத்தில் விளையாடிய அதே வீரர்களே இந்த ஆட்டத்திலும் வி� �ையாடுவார்கள் என பஞ்சாப் அணியின் கேப்டன் டேவிட் ஹஸ்சி தெரிவித்தார். மும்பை அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. கடந்த ஆட்டத்தில் விளையாடிய பிரக்யான் ஓஜா, திஸ்ஸர பெரேரா ஆகியோர் நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக ராபின் பீட்டர்சன், கிளின்ட் மெக்கே ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்வதா� � அறிவித்தது. அதன்படி அந்த அணியின் துவக்க வீரர்களாக நிதின் சைனியும் மன்தீப் சிங்கும் களமிறங்கினர். மன்தீப் சிங் 16 பந்துகளில் 22 ரன்கள் குவித்திருந்த போது ஆர்.பி.சிங் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.
இவரையடுத்து நிதின் சைனியுடன் ஷான் மார்ஷ் ஜோடி சேர்ந்தார். நிதின் சைனி 17 ரன்கள் எடுத்திருந்த போது மெக்கே பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். இவ� �ையடுத்து ஷான் மார்ஷ் உடன் டேவிட் ஹஸ்ஸி ஜோடி சேர்ந்தார்.
ஷான் மார்ஷ் 17 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இவரையடுத்து டேவிட் ஹஸ்ஸியுடன் டேவிட் மில்லர் ஜோடி சேர்ந்தார்.
இருவரும் ஆரம்பத்தில் நிதனமாக ஆடினாலும் போகப் போக அதிரடிக்கு மாறினார்கள். சிறப்பாக ஆடி அரைசதமடித்த டேவிட் ஹஸ்ஸி 40 பந்துகளில் 4 சிக்ஸர்கள் , 4 பவுண்டரிகள் உள்பட 68 ரன்களும், மில்லர் 17 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 1 பவுண்டரி உள்பட 34 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 168 ரன்கள் எடுத்துள்ளது. இதனையடுத்து 169 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு மும்பை அணி களமிறங்கியது.
இந்த அணியின் துவக்க வீரர்களாக சச்சின் டெண்டுல்கரும் ஜேம்ஸ் பிராங்ளினும் களமிறங்கினர். நிதானமாக ஆடிய பிராங்ளின் 22 ரன்கள் எடுத்திருந்த போது அசார் மொகமது பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.
இவரையடுத்து சச்சினுடன் ரோகித் சர்மா ஜோடி சேர்ந்தார். சிறப்பாக ஆடிவந்த சச்சின் 34 ரன்கள் எடுத்திருந்த போது அசார் மொகமது பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்து வந� �த தினேஷ் கார்த்திக் 3 ரன்கள் எடுத்திருந்த போது, பியூஸ் சாவ்லா பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.
இவரையடுத்து ரோகித் சர்மாவுடன் கிரென் பொலார்டு ஜோடி சேர்ந்தார். பொலார்டும் 3 ரன்கள் எடுத்த திருப்தியில் ஆட்டமிழந்தார். சிறப்பாக ஆடிய ரோகித் சர்மா 50 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கேப்டன் ஹர்பஜன் சிங் ரன் ஏதுமின்றி பெவிலியன் திரு� �்பினார்.
இவர்களையடுத்து அம்பதி ராயுடுவும், ராபின் பீட்டர்சனும் ஜோடி சேர்ந்தனர். 18 ஓவர்கள் வரை பஞ்சாப் அணி பக்கமே வெற்றி இருந்தது. இன்னும் 12 பந்துகளில் 32 ரன்கள் எடுக்க வேண்டி இருந்தது.
19-வது ஓவரை பியூஸ் சாவ்லா வீசினார். இந்த ஓவரே ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்தது எனலாம். இந்த ஓவரில் 3 சிக்ஸர்கள், 2 பவு� �்டரிகள் உள்பட 27 ரன்களை மும்பை அணியினர் குவித்தனர்.
கடைசி ஓவரில் 5 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் 5 பந்துகளில் 7 ரன்கள் அடித்து மும்பை அணி போராடி வெற்றி பெற்றது.
அதிரடியாக ஆடிய அம்பதி ராயுடு 17 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகள் உள்பட 34 ரன்களும், ராபின் பீட்டர்சன் 7 பந்துகளில் 2 பவுண்டரிகள், 1 சிக்ஸ ர் உள்பட 16 ரன்களும் குவித்து அணியின் வெற்றிக்கு வித்திட்டனர்.
Post a Comment