புகழ்பெற்ற கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் 'தயாரிப்பாளர்கள் நெட்வொர்க்கின் சிறப்புத் திரையிடல் பிரிவில்' தமிழ்ப் படமான முப்பொழுதும் உன் கற்பனைகள் திரையிடப்படுகிறது.
சர்வதேச அளவில் புதிய திறமைகள் மற்றும் சினிமா போக்குகள் பற்றி தெரிவிக்கும் விதத்தில் இந்தப் பிரிவில் 2004-ம் ஆண்டு முதல் படங்களைத் திரையிடுகிறார்கள். உலகின் முன்னணி இயக� ��குநர்கள் பலரும் இடம்பெற்றுள்ள அமைப்பு இது.
இந்த விழாவுக்கு முப்பொழுதும் உன் கற்பனைகள் படத்தின் தயாரிப்பாளரும் இயக்குநருமான எல்ரெட் குமாருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
பிரான்ஸின் கேன்ஸ் நகரில் வரும் மே 16 முதல் 27-ம் தேதி வரை இந்த விழா நடக்கிரது. இதி� ��் தயாரிப்பாளர்கள் நெட்வொர்க்கின் சிறப்புத் திரையிடல் மே 17 முதல் 23 வரை நடக்கிறது. விழாவின் துவக்க நாளில் முப்பொழுதும் உன் கற்பனைகள் டீமுக்கு சிறப்பு செய்யப்படுகிறது. 22-ம் தேதி படம் திரையிடப்படுகிறது.
"இதனை மிகப்பெரிய கவுரவமாக நாங்கள் கருதுகிறோம்," என்று படத்தின் இயக்குநர் எல்ரெட் குமார் கூறியுள்ளார்.
எல்ரெட் குமார் இயக்கிய முதல் படம் இந்த முப்பொழுதும் உன் கற்பனைகள் என்பது குறிப்பிடத்தக்கது. விண்ணைத் தாண்டி வருவாயா, கோ உள்ளிட்ட பல படங்களின் தயாரிப்பாளர் இவரே!
Post a Comment