தனது அடுத்த மெகா படத்தின் ஹீரோ யார் என்பதில் இயக்குநர் ஷங்கர் ஒரு முடிவுக்கு வந்துவிட்டார். எதிர்ப்பார்த்த மாதிரியே, விக்ரம்தான் அவரது அடுத்த பட ஹீரோ.
இந்தப் படத்துக்கு முதல் முறையாக எழுத்தாளர்கள் சுபா ( சுரேஷ் மற்றும் பாலா) வசனம் எழுதுகிறார்கள். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பார் எனத் தெரிகிறது.
இந்தப் படத்தில் முதலில் விக்ரம் நடிப்பார் என்றும், இல்லையில்லை சூர்யா நடிப்பார் என்றும் மாறிமாறி தகவல்கள் வெளியாகி வந்தன.
ஆனால் தற்போது படத்தின் நாயகனாக ஒப்பந்தமாகி இருக்கிறார் விக்ரம். விஜய் இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் 'தாண்டவம்' படத்தின் பணிகள் முடிந்ததும் ஷங்கர் படத்துக்கு வந்துவிடுவாராம் விக்ரம்.
சிங்கம் 2 படத்தின் ஹீரோ சூர்யா என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியான அடுத்த நாள், ஷங்கர் பட ஹீரோ விக்ரம் என செய்தி வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Post a Comment