மதுரை ஆதீனத்தின் அடுத்த மடாதிபதியாக நித்தியானந்தா முடிசூட்டப்பட்டுள்ளார். பெங்களூருவில் நடந்த நிகழ்ச்சியில் அடுத்த மடாதிபதியாக நித்தியானந்தா முடிசூட்டப்பட்டார்.
சமீபத்தில் மதுரை ஆதீனம் மடத்துக்கு நித்தியானந்தா தனது சீடர்களுடன் வந்து ஆதீனத்தை சந்த ித்து ஆசிபெற்றார். அப்போது 6 அடி உயரமுள்ள தங்கமுலாம் பூசப்பட்ட செங்கோலை மதுரை ஆதீனத்துக்கு நித்தியானந்தா வழங்கினார்.
அப்போதே மதுரை ஆதினத்தின் அடுத்த மடாதிபதியாக நித்தியானந்தா நியமிக்கப்படுவார் என்று பரபரப்பாக பேசப்பட்டது. மதுரை ஆதீனமாவதற்கு நித்தியானந்தா ரூ 1 கோடி வரை செலவுசெய்துள்ளார் என்றும் கூறப்படுகிறது.
தமிழகத்தின் மிகப் பெரிய ஆதீனம ான மதுரை ஆதீனத்தின் 293-வது ஆதீனமாக நித்தியானந்தா முடிசூட்டப்பட்டிருக்கிறார். பெங்களூர் அருகே உள்ள பிடதியில் உள்ள நித்தியானந்தாவின் தியான பீட தலைமை அலுவலக வளாகத்தில் வைத்து முடிசூடும் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது.
மதுரை ஆதீனமாக தற்போது உள்ள அருணகிரிநாத ஞானசம்பந்த தேசிகர், நித்தியானந்தாவுக்கு கிரீடம் சூட்டி தனது அடுத்த வாரிசாக அறிவித்தார்.
பின� ��னர் மதுரை ஆதீனம் செய்தியாளர்களிடம் பேசியதாவது:
மதுரை ஆதீனத்தின் 293வது குரு மகாசன்னிதானமாக நித்தியானந்தாவை நாங்கள் இன்று அறிவித்து பிரகடனம் செய்கிறோம். அவர்தான் மதுரை ஆதீனத்தின் சட்டப்பூர்வமான அடுத்த மகா குரு. அவர் இனி ஸ்ரீலஸ்ரீ ஸ்ரீ பரமஹம்ச நித்தியானந்த ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரியா ஸ்வாமிகள் என்று அழைக்கப்படுவார்.
மதுரை ஆதீன மடத்தி� ��் வழிபாடு உள்ளிட்ட அனைத்து உரிமைகளும் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. மதுரை ஆதீனத்தை அவர் இனி முழுமையாக செயல்படுத்துவார். இந்தியா மற்றும் வெளிநாடுகளில் உள்ள மதுரை ஆதீனத்திற்குச் சொந்தமான 1250 ஏக்கர் நிலம், கோவில்கள் மற்றும் அனைத்து அசையும், அசைய சொத்துக்களையும் இனிமேல் நித்தியானந்தரே நிர்வகிப்பார்.
இவ்வாறு அவர் கூறினார்.
இவ்விழாவில் நடிகை ரஞ்ச� �தா உள்பட பலரும் கல்ந்து கொண்டார்கள் என்றும் கூறப்படுகிறது.
http://stillsshow.blogspot.in
Post a Comment