பிரபல கவர்ச்சி நடிகை சோனா. இவர் ரஜினியுடன் குசேலன், பத்து பத்து, கோ, மிருகம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். கனிமொழி என்ற படத்தையும் தயாரித்தார்.
சமீபத்தில் விருந்து நிகழ்ச்சி ஒன்றில்ஏற்பட்ட தகராறில் போலீஸ், கோர்ட் என்றெல்லாம் சென்று வந்தார். சினிமாவில் பட்ட கஷ்டங்களை படமாக்கப் போவதாக சோனா அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் அளித்த பேட்டி வருமாறு:-
என் வாழ்க்கையில் நிறைய சம்பவங்கள் நடந்து விட்டன. அவற்றை சினிமா படமாக எடுக்க முடிவு செய்துள்ளேன். அந்த படத்தை நானே டைரக்டு செய்யப் போகிறேன்.
சில மாதங்களாக சினிமா பணிகளில் ஈடுபடாமல் ஒதுங்கி இருந்தேன். மீண்டும் நடிக்க திட்டமிட்டுள்ளேன். இதற்காக உடல் எடையை குறைத்துள்ளேன். யுனிக் என்ற நிறுவனத்தை துவங்கி வெளிநாட்டு பொருட்களை விற்பனை செய்து வருகிறேன்.
இந்த நிறுவனம் பேஷன் டிசைனர் சிட்னி ஷெல்டனுடன் இணைந்து ஆஸ்திரேலியாவில் கண்காட்சி மற்றும் பேஷன் ஷோ நடத்த உள்ளது. இதற்காக மாடல் அழகிகளுடன் விரைவில் ஆஸ்திரேலியா செல்ல இருக்கிறேன்.
இவ்வாறு சோனா கூறினார்.
பின்னர் பேஷன் ஷோவில் பங்கேற்கும் அழகிகளை சோனா அறிமுகப்படுத்தினார். நடிகை சோனியா அகர்வால், சிட்னி ஷெல்டன் ஆகியோரும் இதில் கலந்து கொண்டனர்.
Post a Comment