காமெடி நடிகர் வடிவேலு சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு படங்கள் எதிலும் நடிக்கவில்லை. சினிமாவை விட்டு ஒதுங்கி இருக்கிறார். தற்போது அவருக்கு மீண்டும் பட வாய்ப்பு கள் வருகின்றன. கதாநாயகனாக நடிக்கவும், மற்ற ஹீரோக்களுடன் காமெடி வேடங்களில் நடிக்கவும் பல இயக்குனர்கள் அவரை அணுகியுள்ளனர்.
சிம்புத்தேவன் இம்சை அரசன் 23-ம் புலிகேசி யின் இரண்டாம் பாகத்தில் நாயகனாக நடிக்கவும் வடிவேலுவிடம் கதை சொல்லியுள்ளார். இப்படத்தின் முதல் பாகம் ரூ. 4 கோடிக்கு எடுக்கப்பட்டு ரூ. 20 கோடி வரை வசூல் ஈட்டியதாக செய்தி பரவியுள்ளது.
மீண்டும் நடிக்க தயாராவது குறித்து வடிவேலு கூறியதாவது:-
சினிமாவில் சில காலம் இடைவெளி விட்டு விட்டேன். இதனால் நிறைய படங்களில் நடிக்க இயலாமல் போனது. இதற்காக நான் வருத்தப்படவில்லை. சினிமாவில் பல வருடங்களாக பிசியாக நடித்து வந்தேன். இதனால் எனது குடும்பத்தினருடன் செலவிட நேரம் இல்லாமல் போனது. இப்போது குடும்பத்தினருடன் இருந்து நேரத்தை செலவிடுகிறேன்.
இந்த வாய்ப்பு கிட்டியமைக்காக கடவுளுக்கு நன்றி சொல்கிறேன். மீண்டும் சினிமாவில் நடிக்க கதை தேடுகிறேன். சிலர் கதை சொல்லி உள்ளனர். சிம்புத்தேவனும் பிரமாதமான கதையொன்று சொல்லி இருக்கிறார். புதுப்படத்தில் நடிப்பது பற்றி விரைவில் முடிவு செய்வேன்.
இவ்வாறு வடிவேலு கூறினார்.
http://stillsshow.blogspot.in
Post a Comment