பாட்டாளி மக்கள் கட்சிய� �ன் நிறுவனர் டாக்டர் ராமதாசின் மகனான அன்புமணி ராமதாஸ், கடந்த 2004 -ல் மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு மத்திய சுகாதாரத்துறை அமைச்சாராக பதவி வகித்து வந்தார். 2009- ல் நடந்த இந்திய நாடாளுமன்ற தேர்தலுக்கு சற்று முன் அவரது கட்சி செல்வி ஜெயலலிதா தலைமையில் அமைந்த எதிர்க்கட்சிக் கூட்டணியில் சேர்ந்து, ஆளுங்கட்சியான காங்கிரஸ் கூட்டணியை எதிர்த்துப் போட்டியிடத் தீர்மானி� �்ததைத் தொடர்ந்து அவர் பதவி விலகினார்.
அவர் பதவியில் இருந்த காலத்தில் ம. பிரதேசம் இந்தூர் மருத்துவ கல்லூரிக்கு அங்கீகாரம் கொடுக்கப்பட அடிப்படை தகுதிகள் இல்லாத நிலையிலும் தனது பதவியை பயன்படுத்தி அங்கீகாரம் கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்தூர் மருத்துவ கல்லூரிக்கு அங்கீகாரம் வழங்கியது தொடர்பாக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் அன்� �ுமணி ராமதாஸ் மீது குற்றம் சாட்டப்பட்டு வழக்கு தொடரப்பட்டது.
இதுகுறித்து சி.பி.ஐ. விசாரித்து வருகிறது. இந்த வழக்கின் விசாரணை பாட்டியாலா நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த குற்றச்சாட்டு தொடர்பாக சி.பி.ஐ. சார்பில் அவர் மீதும் மேலும் 9 பேர் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சுகாதாரத ்துறை அமைச்சக மூத்த அதிகாரிகள் இரண்டு பேர் மற்றும் அங்குள்ள சப்தர்ஜங் என்கிற மருத்துவமனையின் மூத்த மருத்துவர்களான டி.கே.குப்தா, ஜே.எஸ்.தூபியா ஆகிய இரண்டு பேர் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
Post a Comment