சிம் கார்டு வழங்குவதற்� �ு முன்பு, தொலைத்தொடர்பு நிறுவனங்கள் கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்குமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட வேண்டும். ஏனென்றால், போலி ஆவணங்கள் மூலம் தீவிரவாதிகள் சிம்கார்டுகளை பெற்றிருப்பது மும்பையிலும், டெல்லியிலும் சமீபத்தில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளின்போது தெரிய வந்தது. எனவே, சிம்கார்டு வழங்குவதற்கு மு� �்பு அதை வாங்குபவரின் அடையாளங்களை சரிபார்ப்பது அவசியம்' எனக் கூறி அபிஷேக் கோயங்கா என்பவர், உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இம்மனு, தலைமை நீதிபதி எஸ்.எச்.கபாடியா தலைமையிலான பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. சிம் கார்டு வழங்குவதற்கு முன்பு, வாடிக்கையாளர்களின் அடையாளங்களை தொலைத்தொடர்பு நிறுவனங்கள் முறையாக சரிபார்ப்பத� � தொடர்பான புதிய நடைமுறைகளை உருவாக்க கூட்டு நிபுணர் குழு ஒன்றை நீதிபதிகள் நியமித்தனர்.
இதுபற்றி நீதிபதிகள் மேலும் கூறும்போது, 'இக்குழுவில், மத்திய தொலைத்தொடர்பு துறை, இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) ஆகியவற்றின் அதிகாரிகள் இடம் பெற்று இருக்க வேண்டும். அவர்கள் புதிய நடைமுறைகளை வகுத்து, 3 மாதங்களுக்குள் மத்திய அரசிட ம் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்' என்று உத்தரவிட்டனர்.
Post a Comment