நகைச்சுவைப் புயல் தன் ஓய்வு காலத்துக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார். அடுத்த படத்துக்கான வேலைகளில் பரப� �ப்பாகிவிட்டார்.
அவரது அடுத்த படம், இம்சை அரசன் 23-ம் புலிகேசியின் 2-ம் பாகம்தான் என நாம் ஏற்கெனவே செய்தி வெளியிட்டிருந்தது நினைவிருக்கலாம்.
இப்போது சிம்பு தேவனுடன் கதை விவாதம் நடத்தியுள்ளதை உறுதிப்படுத்தியுள்ள வடிவேலு, புதிய பொலிவுடன், அசத்தலான திரைக்கதையுடன் கூடிய படத்தில் நாயகனாக நடிக்கவிருப்பதாகக் கூறியுள்ளார்.
தனது அடுத்த படம் குறித்து வடிவேலு கூறுகையில், "சினிமாவில் சில காலம் இடைவெளி விட்டு விட்டேன். இதனால் நிறைய படங்களில் நடிக்க இயலாமல் போனது. இதற்காக நான் வருத்தப்படவில்ல� �. சினிமாவில் பல வருடங்களாக பிசியாக நடித்து வந்தேன். இதனால் எனது குடும்பத்தினருடன் செலவிட நேரம் இல்லாமல் போனது. இப்போது குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடுகிறேன்.
இந்த வாய்ப்புக்காக கடவுளுக்கு நன்றி சொல்கிறேன்.
ரெஸ்ட் போதும்னு முடிவு பண்ணி, மீண்டும் சினிமாவில் நடிக்க கதை தேடுகிறேன். சிலர் பல கதைகள் சொல்லி உள்ளனர். சிம்புத்தேவன் பிரமாதமான கதையொன்று சொல்லி இருக்கிறார். விரைவில ் அறிவிப்பை வெளியிடுவேன்," என்றார்.
இந்த ஓய்வு நேரத்தில் வடிவேலு இணையதளங்களின் பயன்பாடு, அதில் வரும் செய்திகள் பார்ப்பது போன்றவற்றை முழுமையாகத் தெரிந்து கொண்டுவிட்டாராம்.
பேஸ்புக், ட்விட்டர்ல எப்போ அப்டேட் பண்ணப் போறீங்க?
Post a Comment