மங்காத்தா படத்தின் மூலம் பெற்ற வெற்றிக்கு பிறகு தனது அடுத்த கதையை எழுதிக் கொண்டிருந்தார் இயக்குனர் வெங்கட் ப� ��ரபு. ஸ்டூடியோ கிரீன் தயாரிப்பு நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டிருந்ததால் கண்டிப்பாக வெங்கட் பிரபுவின் அடுத்த படத்தில் கார்த்தி அல்லது சூர்யா ஆகிய இருவரில் ஒருவர் தான் நடிப்பார் என பேசப்பட்டது.
ஆனால் கதைக்கு பொருத்தமாக இயக்குனர் யாரை தேர்ந்தெடுப்பார் என்ற கேள்வியை கேள்விக்குறி தாங்கிக் கொண்டிருந்தது. தனது மகளின் கோடை விடுமுறையை குளுமையாகக் கொண்டாட வெளிநாடு சென்றிருக்கும் வெங்கட் பிரபு, அடுத்த படத்தின் ஹீரோ கார்த்தி தான் என அறிவித்துவிட்டாராம்.
எனது கதையம்சத்தை வைத்து பார்த்தால் அந்த கதாபாத்திரத்திற்கு கார்த்தி தான் பொருந்துவார். எதிர்காலத்தில் சூர்யாவுடன் ஒரு படம் பண்ணுவேன் என கூறியிருக்கிறார்.
இந்த படத்திற்கு 'பிரியாணி' என பெயர் வைத்திருக்கிறார்களாம்.
கார்த்திக்கு பிரியாணி! சூர்யாவுக்கு?
Post a Comment