இந்தியாவிலலஆட்சி மாறினாலும் காட்சி மாறாது |
நாள் - 1 செய்தி: இலங� ��கை சென்று திரும்பிய........................................அவர்கள் இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்சே இலங்கை அரசியல் அமைப்பின் 13வது திருத்தத்திற்கு மேல் சென்று இனப்பிரச்சனைக்குத் தீர்வு காண்பதாக தன்னிடம் உறுதியளித்ததாகத் தெரிவித்தார்.
நாள் - 2 செய்தி: இலங்கை வந்த ..............................................அவர்களுடன் தான் 13வது திருத்தம் பற்றிக் கலந்துரையாடவில்லை என இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்சே தெரிவித்துள்ள� ��ர்.
இலங்கைக்கு இந்தியாவில் இருந்து ஒவ்வொருதடவையும் அரசியல்வாதிகள் வரும்போது மேலுள்ள செய்திகள் வந்து கொண்டு இருக்கும். வருபவர் பெயர்களை கோடிட்ட இடத்தில் நிரப்பிக் கொள்ளலாம். இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ் எம் கிருஷ்ணா வந்த போதும் இதே நாடகம். சுஸ்மா சுவராஜ் வந்தபோது அதே நாடகம் மீள்கலவை செய்து அரங்கேற்றப்பட்டது.
சுஸ்மாவின் கண்டு பிடிப்பு
� ��மிழர்கள் பகுதியில் ஒரு வீட்டில் பிறந்த நாள் விழா நடந்தாலும் இலங்கைப் படையினர் பங்கு அத்து மீறி நுழைந்து பற்ற வந்து விடுவார்கள்; கோவில்களுக்குள் படையினர் நுழைகின்றனர் என்றெல்லாம் சுஸ்மா சுவராஜ் அம்மையார் கண்டு பிடித்துள்ளார். இது ஏற்கனவே பகிரங்கப்படுத்தப்பட்ட செய்தி. இலங்கையில் நடக்கும் அநியாயங்கள் யாவும் இந்தியாவிற்கு தன் உளவுத்துறை மூலம் தெரியும். அப்படி � ��க்கள் ஒன்று கூடுவதை படையினர் நெருக்கமாகக் கண்காணித்தால்தான் அடுத்த விடுதலைப் போராட்டத்தத்தைத் தடுக்க முடியும் என்று ஆலோசனையை இலங்கைக்கு கூறியது யார் என்பது எமக்குத் தெரியும். அதனால்தான் தமிழர்களின் ஒவ்வோரு வாழ்க்கை அம்சங்களிலும் சிங்களப் படையினரின் தலையீடு இருக்கிறது. இந்த நிலையை இலங்கையில் உருவாக்கியது யார்? இந்தியா இலங்கையில் படை ரீதியாகத் 1987இல் தலையிட � �ுன்னர் தமிழர் பிரதேசங்களில் படையினர் எப்படி இருந்தனர்? ஒவ்வொரு படையினரும் தமது முகாம்களை விட்டு வெளியேறாத நிலை இருந்தது. வெளியே வந்தாலும் பாரிய கவசவாகனக்கள் டாங்கிகள் முன் செல்ல வான்கலங்கள் மேல் செல்லத்தான் படையினர் வெளியே வருவர். வந்தவர்களில் எத்தனை பேர் உயிருடன் திரும்புவார்கள் என்ற நிலை இருந்தது. இலங்கையின் எப்பாகத்திலும் தமிழ்ப் போராளிகள் தாக்குதல் நடத� �தும் திறனுடன் இருந்தனர். அப்போது இலங்கையில் திருக்கோணமலைத் துறை முகத்தில் அமைய இருந்த அமெரிக்க கடற்படையினருக்கான எரிபொருள் மீள் நிரப்பு வசதிகளையும் சிலாபத்தில் அமைய இருந்த அமெரிக்க நீர் மூழ்கிக் கப்பல்களுக்கான அதி தாழ் அலைவரிசை(ultra-law wave) தொடர்பாடல் நிலையத்தையும் தடுக்கவும் அதற்குக் கைக்கூலியாக தமிழர்களின் ஆயுத போராட்டத்தை ஒழிக்கவும் இந்தியா அமைதிப் படை என்ற � �ோர்வையில் இலங்கை வந்தது. வீடுகளிற்குள் புகுந்து பாவித்த வெளிநாட்டு உள்ளாடைகளையும் திருடும் படையினரைத் தமிழர்கள் கண்டு ஆச்சரியப்பட்டனர். இனி உங்களை நாம் பாதுகாக்கிறோம் உங்கள் ஆயுதங்களை எம்மிடம் ஒப்படையுங்கள் என்றது. அதன் பிறகு மூன்று இலட்சத்திற்கு மேற்பட்ட அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட இந்தியா சிங்களவர்களுக்கு உதவிகளை வாரி வழங்கிக் கொண்டிருக்கிறது. இந்திய ாவால்தான அப்படி இருந்த தமிழர்கள் இன்று இப்படி ஆனார்கள் என்று சுஸ்மா குழுவினரால் கண்டறிய முடியவில்லை. இலங்கை தொடர்பாக இந்தியாவின் கொள்கையில் தலை கீழ் மாற்றம் தேவை என சுஸ்மா பரிந்துரைகவில்லை. மாறாக இப்போது எதிர்க்கட்சியில் இருக்கும் சுஸ்மா 2014இல் ஆளும் கட்சியாக வந்தாலும் இபோதுள்ள கொள்கைதான் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும் என்பதை உறுதி செய்யவே சுஸ்மாவை இந்திய வ� �ளியுறவுத் துறை அதிகாரிகளாக இருக்கு தமிழின விரோதிகள் இலங்கைக்கு அனுப்பினார்கள்.
சுஸ்மா மஹிந்த தனிப்பட்ட சந்திப்பு
இலங்கையிலும் இந்தியாவிலும் கொள்கைகள் முரண்பட்டாலும் இந்தியாவின் சாதியத்தையும் பேரினவாததத்தையும் எப்படி எதிர்காலத்தில் முன்னெடுப்பது, தமிழர்களை எப்படி அடக்கி ஆள்வது என்பது பற்றியா சுஸ்மாவும் மஹிந்தாவும் தங்கள் தனிப்பட்ட சந்திப்பில் ஆ ராய்ந்தார்கள்?
நிறைவேற்றத் தேவையில்லாத 13வது திருத்தம்
ராஜீவ் - ஜே ஆர் ஒப்பந்தத்தின் படி உருவாக்கிய இலங்கை அரசியல் அமைப்பின் 13வது திருத்தம் கையொப்பமிட்ட போதே இதை அமூல்படுத்தத் தேவையில்லை என இந்திய வெளியுறவுத் துறை அதிகாரிகள் இலங்கை அரசிடம் அப்போதே தெரிவித்திருந்ததாக ஒரு வதந்தி கொழும்பில் இருந்தது. அது வதந்தி அல்ல உண்மை என்பது இப்போது 24 ஆண்டுகளுக்க� � மேலாகிய பின்பு உறுதியாகிவிட்டது. அவர் என்னிடம் 13வது திருத்தம் அமூல்படுத்துவேன் என்றார் என்பது அவர் தான் அதுபற்றிக் கதைக்கவில்லை என்பதும் இந்தியாவும் இலங்கையும் இணைந்துஆடும் கபட நாடகம்.
ஆளில்லாத் தமிழர்களுக்கு ஆள் கிடைப்பதைத் தடுக்க ஆளில்லா விமானங்கள்
இலங்கைத் தமிழர்களுக்கு உதவ யாருமில்லை அவர்கள் நிலை பிச்சைக் காரர்கள் நிலை போன்றது. அவர்கள் கொடுப்ப தை வாங்கிக் கொள்ள வேண்டும் என பூனூல் போட்ட இந்திய ஆயவாளர்கள் 2009 மே மாதத்திற்குப் பின்னர் எழுதி மகிழ்ந்தார்கள். ஆனால் 2012மார்ச் ஜெனிவாவில் நிலைமை மாறி இருந்தது. ஜெனீவாத் தீர்மானத்தின் பின்னர் ஐரோப்பாவில் வாழும் தமிழர்களிடையே ஒரு வந்ததி பரவியது. ஈழத் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்திற்கு நாம் இனி ஆயுத உதவி வழங்குவோம் என ஒரு முக்கிய மேற்குலக நாடு ஒன்று கூறியது என்ப� �ே அந்த வதந்தி. இந்த வந்தி அடிபட்ட ஓரிரு தினங்களுக்குள் இந்தியாவில் இருந்து இன்னொரு செய்தி வந்தது. பாக்குநீரிணையைக் கண்காணிக்க இந்திய ஆளில்லாப் போர் விமானங்கள் ஈடுபடுத்தப்படும் என்று. அதைத் தொடர்ந்து இந்திய, இலங்கை, மாலை தீவு இணைந்து ஒரு கடற்போர் ஒத்திகை பார்த்தன. ஒரு படைக்கலன்கள் ஏதிய போராட்டம் ஒடுக்கப்பட்டு அந்தப் போராட்டத்திற்கான காரணி தீர்க்கப்படாமல் இருந� �தால் ஐந்து ஆண்டுகளுக்குள் மீண்டும் போராடம் தொடங்கும் என்கின்றனர் அரசறிவியலாளர்கள். அடுத்த தமிழர்களின் போராட்டத்தையும் ஒழித்துக் கட்ட இந்தியா தயாராகிறது.
http://tamil-dinamalar.blogspot.com
Post a Comment