காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளராக இருந்தவர் டாக்டர் அபிஷேக்சிங்வி (53). மேல்-சபை எம்.பி.யான இவர் இந்தியாவில் உள்ள தலைசிறந்த வக்கீல்களில் ஒருவர். இவரது மனைவி அனிதாசிங்� ��ி. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்
அபிஷேக் சிங்வியின் சொந்த ஊர் ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர். இவர் தாக்கல் செய்த சொத்துக் கணக்கு பட்டியலில் தனது ஆண்டு வருமானம் ரூ.50 கோடி என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு அபிஷேக் சிங்வி டெல்லி ஐகோர்ட்டு வளாகத்தில் உள்ள அவரது அறையில் இன்னொரு பெண்ணுடன் உல்லாசமாக இருப்பது � �ோன்ற 'செக்ஸ்' வீடியோ ஒன்று 'யு டியூப்' உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்ட இணையதளங்களில் வெளியானது.
சில தனியார் தொலைக்காட்சிகளும் ஒளிபரப்பின. அபிஷேக் சிங்வியின் இந்த செக்ஸ் வீடியோ காட்சிகளை பார்த்த காங்கிரஸ் மேலிட தலைவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுபற்றி அவரிடம் விளக்கம் கேட்டதற்கு 'அந்த வீடியோ காட்சிகள் அனைத்தும் போலியானவை. என்னிட� ��் வேலை பார்த்த டிரைவர் ஒருவர்தான் என் பெயரை கெடுப்பதற்காக இந்த போலியான வீடியோ காட்சிகளை இன்டர்நெட்டில் பரப்ப விட்டுள்ளார். இக்காட்சிக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை' என்று அதிரடியாக மறுத்தார்.
ஆனால் பா.ஜனதா உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் 'யு டியூப்' இணைய தளத்தில் வெளியான அபிஷேக் சிங்வி 'செக்ஸ்' வீடியோ காட்சிகள் போலியானவை அல்ல. அதில் அவர் பெண் வக்க� ��ல் ஒருவருடன் உல்லாசமாக இருப்பது தெளிவாகத் தெரிகிறது. அவர் வீடியோ போலியானது என்று கூறி தப்பிவிடமுடியாது. அவர் உடனடியாக பாராளுமன்ற சட்டக்குழு உறுப்பினர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்று போர்க் கொடி தூக்கின.
இதனால் அவர் வேறு வழியின்றி அப்பதவியை ராஜினாமா செய்தார். அதன் பிறகு காங்கிரஸ் மேலிட தலைவர்களின் வற்புறுத்தலின் பேரின் காங்கிரஸ் செய்தி � ��ொடர்பாளர் பதவியையும் ராஜினாமா செய்தார்.
நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள அபிஷேக் சிங்வியின் செக்ஸ் வீடியோ காட்சிகள் தற்போது ஆயிரத்திற்கும் மேற்பட்ட இணைய தளங்களில் பரப்பப்பட்டுள்ளன. இதை 20 லட்சம் பேர் பார்த்துள்ளனர். இதனால் அபிஷேக் சிங்வி மற்றும் அவரது ஆதரவாளர்கள கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
ஜோத்பூரை சேர்ந்த க� ��ங்கிரஸ் நிர்வாகி கிஷன்ஜி கூறும்போது, 'யு டியூப்' உள்ளிட்ட ஏராளமான இணையதளங்களில் எங்கள் தலைவர் அபிஷேக் சிங்வி இளம்பெண் ஒருவருடன் உல்லாசமாக இருப்பது போன்ற செக்ஸ் வீடியோ காட்சிகள் போட்டி போட்டு ஒளிபரப்பப்படுகின்றன.
இதனால் எங்கள் தலைவருக்கும், காங்கிரசுக்கும், நாட்டு மக்களிடம் கெட்டபெயர் ஏற்படுகிறது. எனவே இணைய தளங்களில் எங்கள் தலைவர் இருப்பது போ� ��்ற போலி செக்ஸ் வீடியோவை ஒளிபரப்ப தடை விதிக்க வேண்டும் என்றார்.
சில நாட்களுக்கு முன்பு தனியார் டி.வி.க்களில் இவ்வீடியோ காட்சிகள் காட்டப்பட்டன. இதற்கு தடை கோரி டெல்லி ஐகோர்ட்டில் அபிஷேக்சிங்வி வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து ஐகோர்ட்டு, அபிஷேக்சிங்வி செக்ஸ் வீடியோ காட்சிகளை ஒளிபரப்ப தனியார் டி.வி.க்களுக்கு தடை விதித்தது. அபிஷேக் சிங்வி மகிழ்ச்சி அ� ��ைந்தார். ஆனால் இணைய தளங்களில் அதிவேகமாக பரபரப்பப்பட்டு வரும் செக்ஸ் வீடியோ காட்சிகளை பார்த்து மிரண்டு போயுள்ளார்.
Post a Comment