News Update :
Home » » புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தை துவக்கி வைத்தார் ஜெயலலிதா!

புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தை துவக்கி வைத்தார் ஜெயலலிதா!

Penulis : karthik on Wednesday, 11 January 2012 | 19:10

தமிழகத்தில் புதிய விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தை முதல்வர்
ஜெயலலிதா தொடங்கி வைத்தார். மருத்துவக் காப்பீட்டு திட்டத்தினால் 1.34
கோடி குடும்பங்கள் பயன்பெறுவார்கள். முதலமைச்சரின் விரிவான மருத்துவக்
காப்பீட்டு திட்டத்தில் பதிவு செய்து கொள்ளவும், மற்ற விவரங்களை அறியவும்
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இதற்கென்று தனியாக மையம்
அமைக்கப்பட்டுள்ளது. மேலும், இந்திட்டத்தின் விவரங்கள் மற்றும் உதவி பெற
24 மணி நேர கட்டணம் இல்லா தொலைபேசி சேவையான18004253993 என்ற எண்ணில்
தொடர்பு கொள்ளலாம்.முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு
திட்டத்தில் ஒரு குடும்பத்திற்கு ஆண்டு ஒன்றுக்கு ரூ.1 லட்சம் வீதம், 4
ஆண்டுகளுக்கு ரூ.4 லட்சம் வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட சில சிகிச்சைகளுக்கு ரூ.1.5 லட்சம் வரை வழங்கப்பட உள்ளது.
பச்சிளம் குழந்தைகளுக்கான சிகிச்சை முறை உட்பட 1016 சிகிச்சைகள், 113
தொடர் சிகிச்சைகள் மற்றும் 23 நோய் அறிதல் கண்டுப்பிடிப்பு சிகிச்சைகள்
அனுமதிக்கப்படுகிறது. நோயாளிகளின் சிகிச்சை சம்பந்தப்பட்ட பரிசோதனைகள்,
காப்பீட்டுக்காக வரையறுக்கப்பட்ட தொகையில் அடங்கும். அறுவை சிகிச்சை
தேவைப்படாத பட்சத்தில் செலவழிக்கப்பட்டகட்டணத்தொகை வழங்க வழிவகை
செய்யப்பட்டுள்ளது. காப்பீட்டு தொகை தனியார் மருத்துவமனைகளுக்கு
வழங்குவது போலவே, அரசு மருத்துவமனைகளுக்கும் முழுமையாக வழங்கப்படும்.
இதன் மூலம், அரசு மருத்துவமனைகளின் செயல்பாடுகள் மேம்படுத்தப்படும்
Share this article :

Post a Comment

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger