News Update :
Home » » மகரஜோதிக்குப் பிறகுதமிழர்களை தாக்க மலையாளிகள் சதி-உளவுப் பிரிவு

மகரஜோதிக்குப் பிறகுதமிழர்களை தாக்க மலையாளிகள் சதி-உளவுப் பிரிவு

Penulis : karthik on Thursday, 12 January 2012 | 01:37

மகரஜோதி முடிந்ததும் தமிழர்களைமிகப் பெரிய அளவில் தாக்கி
விரட்டியடிக்கும் சதித் திட்டம் கேரளாவில் இருப்பதாகவும் , இதுகுறித்து
கேரள அரசு உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைளை எடுக்க வேண்டும் என்றும்
மத்திய உளவுப் பிரிவு எச்சரிக்கைத் தகவல் அனுப்பியுள்ளதாக தகவல்
வெளியாகியுள்ளது.
இந்த எச்சரிக்கை குறித்து கேரளாவைச் சேர்ந்த ஒரு நாளிதழ் செய்தி
வெளியிட்டுள்ளது. அதேசமயம் , கேரளாவில் தமிழர்கள் தாக்கப்பட்டால் அதற்கான
பதிலடிஉடனடியாக தமிழகத்திலும் தரப்படும் சூழல் உள்ளதாகவும் மத்திய உளவுப்
பிரிவு எச்சரித்துள்ளது.
மத்திய உளவுப் பிரிவு தகவல் உண்மையாக இருக்கக் கூடும் என்றே
நம்பப்படுகிறது. காரணம் , சபரிமலைக்குப் போய் விட்டுத் திரும்பும் தமிழக
பக்தர்களும் கூட இப்படித்தான் முனுமுனுக்கின்றனர்.
தற்போது தமிழகத்திலிருந்து வரும் பக்தர்களால் பெருமளவில் வியாபாரம்
நடக்கிறது. இதை கெடுத்துக் கொள்ள மலையாளிகள் குறிப்பாக வியாபாரிகள்
விரும்பவில்லை. ஏற்கனவே பக்தர்கள் வரவு வெகுவாக குறைந்திருப்பதால்
வியாபாரம் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே வந்தவரை லாபம்
பார்ப்பதில் அவர்கள் ஆர்வமாக உள்ளனர்.
இப்போது கூட கேரளாவுக்குப் போய் விட்டுத் திரும்பும் எந்த ஒரு
தமிழ்நாட்டுக்காரரும் மலையாளிகளிடம் திட்டு வாங்காமல் வர முடிவதில்லை.
அந்தஅளவுக்கு தொடர்ந்து கேவலமாக பேசுவதும் , திட்டுவதும் ,
வம்பிழுப்பதும் , அடிப்பதும் , தாக்குவதும் தொடர்ந்து கொண்டுதான் உள்ளது.
மகரஜோதி முடியட்டும் என்று அங்குள்ளவர்கள் தங்களிடம் எச்சரிக்கை
தொணிக்கும் வகையில்கூறுவதாகவும் தமிழக பக்தர்கள் கூறுகிறார்கள். இதை
வைத்துப் பார்க்கும்போது மிகப் பெரியஅளவிலான தாக்குதலுக்கு அவர்கள்
தயாராகி வருவதாக கூறப்படுகிறது. இதைத்தான் மத்திய உளவுத்துறையின்
எச்சரிக்கையும் பிரதிபலிக்கிறது.
அதேசமயம் , கேரளாவில் தமிழர்கள் மீது பெரும் தாக்குதல் நடந்தால் அதற்கு
விரைவான , உடனடியான பதிலடியாக தமிழகத்தில் மலையாளிகளும் தாக்கப்படுவர்
என்றும் மத்திய உளவுத்துறை எச்சரித்துள்ளது.
ஏற்கனவே கேரளாவில் தமிழர்கள் மீதான தாக்குதலைக் கண்டித்து தமிழகத்தில்
மலையாளிகளின் வர்த்தக நிறுவனங்கள் மீது மட்டும் தமிழக மக்களில் சிலர்
தாக்குதல் நடத்தினர். ஆனால் எந்த ஒரு மலையாளியும் தாக்கப்படவில்லை.
மகரஜோதிக்குப் பிறகு தமிழர்கள்பெருமளவில் கேரளாவில் தாக்கப்பட்டால் ,
தமிழகத்திலும்மலையாளிகள் பெருமளவில் தாக்கப்படுவர் என்று உளவுத்துறை
தகவல் கூறுகிறாம்.
இந்த தாக்குதல் எண்ணம் இருபக்கமும் இருப்பதால் மகர ஜோதிக்குப் பிறகு என்ன
நடக்குமோ என்ற அச்சம் இரு பக்க மக்களிடமும் எழுந்துள்ளது. விபரீதம்
நடக்கும் முன்பு கேரள அரசு உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க
வேண்டும் என்று தமிழகம் எதிர்பார்க்கிறது. தமிழர்கள் கேரளாவில்
தாக்கப்பட்டால் அது மிகப் பெரிய எதிர் விளைவுகளை ஏற்படுத்தும் என்றும்
கூறப்படுகிறது.
Share this article :

Post a Comment

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger