News Update :
Home » » அந்தமான் பழங்குடியின பெண்களை கட்டாயப்படுத்தி அரைநிர்வாண நடனம் ஆடவைத்த போலீசார் - வீடியோ

அந்தமான் பழங்குடியின பெண்களை கட்டாயப்படுத்தி அரைநிர்வாண நடனம் ஆடவைத்த போலீசார் - வீடியோ

Penulis : karthik on Wednesday, 11 January 2012 | 04:03

இந்தியாவில், அந்தமான் தீவில் உள்ள ஜராவா பழங்குடியின மக்களுக்கு உணவு
கொடுத்து அவர்களை கட்டாயப்படுத்தி அரை நிர்வாண நடனம் ஆட வைத்த தகவல்
வெளியாக அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெற்கு அந்தமானில் ஜராவா பழங்குடியினத்தைச் சேர்ந்த 403பேர்
வாழ்கின்றனர். அவர்களை சுற்றுலாப் பயணிகளிடம் இருந்து காக்க வேண்டிய
போலீசாரே அவர்களைகட்டாயப்படுத்தி அரை நிர்வாண நடனம் ஆட வைத்துள்ளனர்.
இந்த வீடியோவை தி அப்சர்வர் என்ற இங்கிலாந்து நாளிதழ் வெளியிட்டுள்ளது.
அந்த வீடியோவில் ஒரு போலீஸ்காரர் நான் தான் உங்களுக்கு உணவு கொடுத்தேனே.
இப்பொழுது நடனம் ஆடுங்கள் என்கிறார். குட்டைப் பாவாடை மட்டும் அணிந்த அரை
நிர்வாண பழங்குடியினப் பெண்கள் வெட்கப்பட்டு சிரிக்கின்றனர். ம் ஆடுங்கள்
என்று அந்த போலீஸ்காரர் கூறுகிறார். உடனே அவர்களும் மெதுவாக
ஆடுகின்றனர்.இதை அங்கு நின்று கொண்டிருக்கும் சுற்றுலாப் பயணிகள்
பார்த்து ரசிக்கின்றனர்.
அந்த சுற்றுலாப் பயணிகளிடம் லஞ்சம் வாங்கிக் கொண்டு தான் போலீசார்
இவ்வாறு செய்துள்ளனர்.இந்த வீடியோ தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை
ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் குறித்து இன்னும் 24 மணிநேரத்திற்குள்
அறிக்கை சமர்பிக்குமாறு உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
அநத வீடியோ கடந்த 2002-ம் ஆண்டு எடுத்தது. அதை எடுத்தவர்கள் விதிமுறைகளை
மீறியுள்ளனர். எனவேஅவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று
அந்தமான் டிஜிபி எஸ்பி தியோல் தெரிவித்துள்ளார்.
ஆனால் அந்த வீடியோ அண்மையில் எடுக்கப்பட்டதாக தி அப்சர்வர் செய்தியாளர்
கெதின் சாம்பர்லைன் தெரிவித்துள்ளார். வெறும் ரூ.15,000த்தை போலீசாருக்கு
லஞ்சமாக கொடுத்து தான் பழங்குடியினப் பெண்களை நடனம் ஆடச் செய்துள்ளனர்
என்று அவர் தெரிவித்துள்ளார்.
Share this article :

Post a Comment

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger