News Update :
Home » » கள்ளக்காதலனுடன் மனைவியை துண்டு துண்டாக வெட்டி கொன்ற கணவர் கைது

கள்ளக்காதலனுடன் மனைவியை துண்டு துண்டாக வெட்டி கொன்ற கணவர் கைது

Penulis : karthik on Wednesday 11 January 2012 | 18:55

கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலத்தை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (45)
விவசாயி. இவரது மனைவி கல்யாணி (40). இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.
கணவன், மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக கணவனை விட்டுப்
பிரிந்த கல்யாணி தனது மகன்களுடன் தனியே கெலமங்கலத்தில் உள்ள ஜீவா நகரில்
வசித்து வந்தார்.
அந்தப் பகுதியில் கல்யாணி மகளிர் குழு தலைவியாக இருந்தார். மேலும்
மாதாந்திர சீட்டும் நடத்தி வந்தார். கல்யாணிக்கும், தேன்கனிக்கோட்டை
அருகே உள்ள உச்சனப்பள்ளியை சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகரான வெங்கடேசன் (40)
என்வருக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்தது.
வெங்கடேசன் பெங்களூரில் வாட்ச் கம்பெனி நடத்தி வந்தார். நேற்று முன்தினம்
இரவு வெங்கடேசன், கல்யாணியின் வீட்டிற்கு வந்தார். வீட்டின் மொட்டை
மாடியில் வெங்கடேசனும், கல்யாணியும் உல்லாசமாக இருந்தனர். அப்போது அங்கு
வந்த மர்ம நபர் அவர்கள் 2 பேரையும் வெட்டி படுகொலை செய்தார். இந்த இரட்டை
கொலை தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் கொலை செய்யப்பட்ட கல்யாணிக்கு பலருடன் தொடர்பு இருப்பது
தெரியவந்தது. எனவே இந்த கொலை கள்ளத்தொடர்பு விவகாரத்தில் நடந்ததா? அல்லது
வெங்கடேசன் மீது ஏற்பட்ட தொழில்போட்டியில் யாராவது சமயம் பார்த்து
தீர்த்து கட்டினார்களா? என்று போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தினர்.
மேலும் கொலை செய்யப்பட்ட கல்யாணி, வெங்கடேசன் ஆகியோரின் உடலில் இருந்த
வெட்டு காயங்களின் அடிப்படையில் அவர்கள் செக்ஸ் தகராறில் கொலை
செய்யப்பட்டு இருப்பதை போலீசார் உறுதி செய்தனர். இதையடுத்த போலீசாரின்
கவனம் கல்யாணியின் கணவர் கிருஷ்ணமூர்த்தியின் மீது திரும்பியது. அவரை
பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
அப்போது அவர் கள்ளக்காதலனுடன் மனைவியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.
இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட கிருஷ்ணமூர்த்தி போலீசில் கொடுத்துள்ள வாக்கு மூலத்தில்
கூறியிருப்பதாவது:-
எனது மனைவி கல்யாணி பணக்காரியாக, பகட்டான வாழ்க்கை வாழ ஆசைப்பட்டாள்.
சாதாரன விவசாயியான என்னால் அவளது ஆசையைபூர்த்தி செய்ய முடியவில்லை.
இதனால் என்னை பார்த்து கிண்டலாகபேசி சிரிப்பாள். இது ஆத்திரத்தை
ஏற்படுத்தி வந்தது. மேலும் கல்யாணி என்னை பார்த்து 'நீ ஒரு ஆம்பிளையா'
என்று கேட்பாள். இதனால் எனக்கு அவள் மீது வெறுப்பு ஏற்பட்டது. இதைத்
தொடர்ந்து ஏற்பட்ட தகராறில் நாங்கள் பிரிந்துவிட்டோம்.
இந்நிலையில் அவள் வேறு வீட்டிற்கு மகன்களுடன் தனியாக குடிபோனாள். அங்கு
மகளிர் சங்கம் ஆரம்பித்து தலைவியானாள்.மகளிர் குழு தலைவி என்பதால்
கல்யாணியை பார்க்க அடிக்கடி வீட்டிற்கு பல ஆண்கள் வந்து சென்றனர்.
அதேபோல் அ.தி.மு.க. பிரமுகரான வெங்கடேசனும் வந்து சென்றார். நாளடைவில்
அவர்களுக்குள் கள்ளக்காதல் ஏற்பட்டது.
பின்னர் வெங்கடேசன் கல்யாணியுடன் வீட்டிலேயே தங்க ஆரம்பித்தார். 2
மகன்களும் தூங்கிய பின்னர் இவர்கள் 2 பேரும் படுக்கையுடன் வீட்டின்
மொட்டை மாடிக்கு சென்று உல்லாசம் அனுபவித்து வந்தார்கள். கடந்த ஒரு
வாரமாக அவர்களைக் கண்கானித்தேன். அவர்கள் உல்லாசமாய் இருப்பதை நான்
நேரில் பார்த்தேன். இது எனக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.
எனவே அவர்களை கொலை செய்யவேண்டும் என்று திட்டம் போட்டேன். அதன்படி நேற்று
முன்தினம் இரவு வெங்கடேசன் கல்யாணியின் வீட்டிற்கு வந்தார். அவரை உள்ளே
அழைத்து சென்ற கல்யாணி அவருடன் மது குடித்தாள். 2 பேரும் மதுபோதையில்
மொட்டை மாடிக்கு சென்றதை கவனித்தேன். பின்னர் நானும் மொட்டை மாடிக்கு
நைசாக ஏறினேன்.
அங்கு அவர்கள் 2 பேரும் ஆடைகளை களைந்து உல்லாசம் அனுபவித்து கொண்டு
இருந்தனர். அந்த நேரத்தில் நான் திடீரென்று வீச்சரிவாளுடன் அங்கு
சென்றதும் அவர்கள் என்னை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். ஆத்திரத்தில்
இருந்த நான் முதலில் வெங்கடேசனனை உடலின் பல இடங்களில் வெட்டினேன். என்
வெறி தீர வெட்டினேன். தொடர்ந்து கல்யாணியை வெட்ட முயன்றேன். அப்போது அவள்
2 கைகளாலும் என்னை தடுத்தாள். இதில் வெட்டுப்பட்டுஅவளது 2 கைகளும்
துண்டானது. பின்னர் ஆத்திரம் தீராத நான் அவளது கழுத்தை அறுத்து துடிக்க,
துடிக்க, கொலை செய்தேன்.
2 பேரும் ரத்தவெள்ளத்தில் உயிருக்கு போராடி இறந்ததை நேரில் கண்டு
சந்தோசம் அடைந்தேன். பின்னர் அதே பகுதியில் உள்ள ஒரு விறகு மண்டியில்
போய் படுத்து கொண்டேன். பின்னர் என்னை பிடித்து போலீசார் விசாரித்தபோது
உண்மையை ஒத்துக்கொண்டேன்.
கணவனை ஏமாற்றி விட்டு கல்யாணி போல் மற்ற ஆண்களுடன் உறவு வைக்கும்
பெண்களுக்கு இது ஒரு பாடமாக அமையும். கட்டிய கணவன் என்று கூட பாராமல்
என்னை மிகவும் அவமானப்படுத்தியவள் கல்யாணி என்று ஆவேசமாக கூறினார்.
இதையடுத்து போலீசார் கிருஷ்ணமூர்த்தியை தேன்கனிக்கோட்டை நீதிமன்றத்தில்
நீதிபதி இன்ப கார்த்திக் முன்னிலையில் ஆஜர்படுத்தினார்கள். அவரை நீதிபதி
15 நாள் சிறையில் அடைக்க உத்தரவிட்டதை அடுத்து கிருஷ்ணமூர்த்தி சேலம்
சிறைக்கு கொண்டு வரப்பட்டு அடைக்கப்பட்டார்.
Share this article :

Post a Comment

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger