வீரகேரளம்புதூர் :ஊத்துமலை அருகே மாமியாரை பலாத்காரம் செய்து கொலை செய்த மருமகனை போலீசார் தேடி வருகின்றனர்.
ஊத்துமலை போலீஸ் சரகம் வெண்ணிலிங்கபுரத்தை சேர்ந்தவர் ஊரிமுத்தம்மாள் (51). கணவரை இழந்த இவருக்கு வள்ளிக்குமாரி (25) என்ற மகளும், முருகன் (18) என்ற மகனும் உள்ளனர். மற்றொரு மகள் மூளை வளர்ச்சி குன்றியவராக உள்ளார். முருகன் சென்னையில் பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வருகிறார். வள்ளிக்குமாரிக்கும், அதே ஊரை சேர்ந்த வேல்மாணிக்கதேவர் மகன் சுப்பிரமணியத்திற்கும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இரண்டு குழந்தைகள் உள்ளனர். ஊரிமுத்தம்மாள் மகன், மருமகனுடன் ஒரே வீட்டில் வசித்து வந்தார்.
இந்நிலையில் ஊரிமுத்தம்மாள் நேற்று காலை ரெட்டியார்பட்டி அருகிலுள்ள வயலில் பிணமாக கிடந்தார். தலையில் தாக்கப்பட்டு ஆடைகள் கிழிந்த நிலையில் அரை நிர்வாண கோலத்தில் பிணமாக கிடந்தார். அவரது உடல் அருகே மருமகன் சுப்பிரமணியனின் சட்டை மற்றும் சைக்கிள் கிடந்துள்ளது. சம்பவம் குறித்து அறிந்தவுடன் சங்கரன்கோவில் டிஎஸ்பி மதிவாணன், ஊத்துமலை இன்ஸ்பெக்டர் பெலிக்ஸ்பீட்டர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், முருகன் மாமியாருடன் வசித்து வந்தபோதும், வேலை எதற்கும் செல்லாமல் குடித்துவிட்டு வந்து தகராறு செய்து வந்தாராம். சொத்தை தன் பெயரில் எழுதி வைக்கும்படியும் தகராறு செய்து வந்தாராம். இந்நிலையில் நெல்லுக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக வயலுக்கு செல்லும் ஊரிமுத்தம்மாளுடன் துணைக்கு சுப்பிரமணியனும் செல்வாராம். இதுபோன்று நேற்றிரவும் சென்றுள்ளார். காலையில் இருவரும் வீடு திரும்பவில்லை.
சுப்பிரமணியன் போதையில் சொந்த மாமியாரையே பலாத்காரம் செய்து தலையில் மம்பட்டி கணையால் தாக்கி கொலை செய்துவிட்டு தலைமறைவாகி இருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர். இதுகுறித்து ஊத்துமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய சுப்பிரமணியனை தேடி வருகின்றனர்.
Post a Comment