News Update :
Home » » வேலூர் அருகே பள்ளி வேன் கவிழ்ந்து 20 மாணவர்கள் படுகாயம்

வேலூர் அருகே பள்ளி வேன் கவிழ்ந்து 20 மாணவர்கள் படுகாயம்

Penulis : karthik on Monday 9 January 2012 | 06:02

வேலூர்: வேலூர் அருகே பள்ளி வேன் கவிழந்து விபத்துக்குள்ளனாதில் 20
மாணவர்கள் படுகாயம் அடைந்தனர்.
வேலூர் மாவட்டம் பனப்பாக்கத்தை அடுத்து உள்ளது மேட்டு வெட்டங்குளம்.
இங்குதனியார் மெட்ரிக்குலேஷன் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகின்றது. இந்த
பள்ளியில் சுமார் 1200 மாணவர்கள் படித்து வருகின்றனர். சுற்றுப்புற
கிராமங்களில் உள்ள மாணவர்கள் பள்ளி வேன் மூலம் அழைத்து வரப்படுகின்றனர்.
வழக்கம் போல் இன்றுகாலை அரக்கோணம்-ஓச்சேரி சாலை பகுதியில் இருந்து
மாணவர்களை ஏற்றிக் கொண்டு வேன் பள்ளி நோக்கி வந்து கொண்டிருந்தது.
அப்போது எதிரே வந்த வாகனத்திற்கு வழிவிடுவதற்காக டிரைவர் வேனை
சாலையோரத்தில் திருப்புகையில் சற்றும் எதிர்பாராத விதமாக வேன்
சாலையோரபள்ளத்தில் கவிழ்ந்தது. இதனால் வேனில் இருந்த மாணவர்கள் பயத்தில்
அலறினர்.
உடனே அப்பகுதி மக்கள் ஓடி வந்து மாணவர்களை மீட்டனர்.இதில் படுகாயமடைந்த
20 மாணவர்களை ஆம்புலன்ஸ் மூலம் அரக்கோணம் அரசு மருத்துவமனையில்
சேர்த்தனர்.
இது குறித்து தகவல் அறிந்ததும் பெற்றோர்கள் பள்ளியின்
முன்பும்,அரக்கோணம் அரசு மருத்துவமனை முன்பும் குவிந்தனர். இதனால்
அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Tags: vellore , வேலூர் , விபத்து , accident
Share this article :

Post a Comment

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger