News Update :
Home » » காவிரி ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கி 7 பேர் பலி

காவிரி ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கி 7 பேர் பலி

Penulis : karthik on Monday 9 January 2012 | 05:34

நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் அருகே உள்ள ஓடப்பள்ளி கதவணை திடீரென
திறக்கப்பட்டதால் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த 9 பேர் தண்ணீரில்
அடித்து செல்லப்பட்டனர்.
நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் அருகே காவிரி ஆற்றில் ஓடப்பள்ளி கதவணை
அமைக்கப்பட்டுள்ளது. இங்கு தேக்கப்படும் தண்ணீரின் மூலம் மின்உற்பத்தி
செய்யப்படுகிறது. ஆற்றில் தண்ணீர் குறைவாக வருவதால் தண்ணீரை தேக்கி மின்
உற்பத்திக்காக திறந்துவிடுவார்கள். சுற்று வட்டார பகுதி மக்கள் மின்
திட்ட பணிகளை பார்க்க அவ்வப்போது வந்து செல்வார்கள்.
ஈரோடு ரயில்வே காலனியை சேர்ந்த சார்லி ஸ்மித் (40) இவரது மனைவி டேபோரா
(38), மகள்கள் நிகிதா (21),சானா (19) மற்றும் இவர்களது உறவினர்கள்
அரேபியாவைச் சேர்ந்த டேவிட்பாஸோ (48), இவரது மனைவி கி£டியோபாஸோ (38)
இவர்களது மகள் கேன்டிஸ்பென் (10), ராகின் (3) மற்றும் கிளாடின் (26)
ஆகியோர் ஓடப்பள்ளி கதவணை மின்திட்ட பகுதியை சுற்றி பார்க்க நேற்று
வந்தனர். அப்போது கதவணை மூடப்பட்டு இருந்தது. இதனால், ஆற்றில் குறைவாகவே
தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இதனால் அவர்கள் 9 பேரும் ஆற்றில் இறங்கி
தண்ணீர் குறைவாக செல்லும் பகுதிக்கு சென்று புகைப்படம் எடுத்துக்
கொண்டிருந்தனர்.
மதியம் 2 மணியளவில் கதவணையின் 18 கதவுகளும் திடீரென திறக்கப்பட்டது.
கதவணை வழியாக தண்ணீர் வேகமாக வெளியேறியது. தண்ணீர் வருவதைப் பார்த்ததும்
அவர்கள் மேடான பகுதிக்குச் செல்ல முயன்றனர். ஆனால், அதற்குள் அவர்களை
தண்ணீர் அடித்துச் சென்றது. அவர்களுடைய அலறல் சத்தத்தைக் கேட்டதும் கரைப்
பகுதியில் இருந்த மீனவர்கள், ஆற்றில் குதித்து நீரில் அடித்துச் சென்ற
டபரா, ராகின் மற்றும் கேன்டிஸ்மேன் ஆகியோரை காப்பாற்றினர். ஆனால், சிறுமி
கேன்டிஸ்பென் கரைக்கு வந்தவுடன் மூச்சுத் திணறி பரிதாபமாக இறந்தாள். மற்ற
6 பேரையும் தண்ணீர் அடித்துச் சென்றுவிட்டது.
தண்ணீர் அடித்துச் செல்லப்பட்ட 6 பேரின் கதி என்ன என்று தெரியவில்லை.
அவர்கள் தண்ணீரில்மூழ்கி இறந்திருக் கலாம் என்று அஞ்சப்படுகிறது.
இந்த துயர சம்பவம் பற்றிய தகவல் கிடைத்ததும் ஈரோடு மாவட்ட கலெக்டர்
சண்முகம், நாமக்கல் மாவட்ட கலெக்டர் குமரகுருபரன், ஆர்.டி.ஓ.க்கள்
சுகுமார்(ஈரோடு), கவிதா (நாமக்கல்), ஈரோடு மாநகராட்சி மேயர்
மல்லிகாபரமசிவம் ஆகியோர் காவிரி ஆற்றங்கரைக்கு விரைந்தனர். கதவணைக்கு
வந்த கலெக்டர்கள் சண்முகம், குமரகுருபரன், ஆகியோர் கதவணையில் உள்ள 18
மதகுகளில் இருந்து காவிரி ஆற்றுக்கு தண்ணீர் திறந்துவிடுவதை
நிறுத்தும்படி உத்தரவிட்டனர்.
அதன்படி அணையின் அனைத்து மதகுகளும் அடைக்கப்பட்டது. ஆனாலும் மேட்டூர்
அணையில் இருந்து தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டு இருந்ததால், கதவணையில்
அதிக அளவில் தண்ணீர் தேங்கியது. எனவே உடனடியாக மேட்டூர் அணையில்
இருந்தும் தண்ணீர் திறந்துவிடுவது நிறுத்தப்பட்டது.
வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட 6 பேரின் உடல்களை மீட்கும் பணியை
முடுக்கிவிட்டனர். இந்த பணியில்அந்தப்பகுதியை சேர்ந்த 30 மீனவர்கள்
ஈடுபட்டுள்ளனர். இவர்கள் தொடர்ந்து தண்ணீரில் இழுத்து செல்லப்பட்ட 6
பேரின் உடலையும் தீவிரமாக தேடிவருகிறார்கள்.
Share this article :

Post a Comment

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger