மண் சார்ந்த, மக்கள் சார்ந்த படமாக எடுக்கும் இயக்குநர் இமயம் பாரதிராஜா, நீண்ட இடைவெளிக்கு பிறகு தன்னுடைய கனவு படமான அன்னக்கொடியும் கொடிவீரனும் படத்தை கையில் எடுத்துள்ளார். படத்தில் ஹீரோவாக முதலில் பார்த்திபன் தான் நடிக்க இருந்தார். ஆனால், ஏனோ சில காரணங்களால் அவர் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக டைரக்டர் அமீர் நடிக்க இருக்கிறார். கூடவே மற்றொரு ஹீரோவாக பாரதிராஜாவின் நெருங்கிய நண்பரின் மகன் அச்சன் நடிக்க இருக்கிறார். நாயகிகளாக வாகைசூட வா இனியாவும், கோ கார்த்திகாவும் நடிக்கின்றனர். இதில் இனியா, அமீருக்கு ஜோடியாகவும், கார்த்திகா புதுமுகம் அச்சனுக்கு ஜோடியாகவும் நடிக்க உள்ளனர்.
பொதுவாக பாரதிராஜா அந்தகாலத்திலிருந்தே தன்னுடைய படத்தின் அறிமுக ஹீரோ, ஹீரோயின்களின் பெயரை சினிமாவிற்காக மாற்றுவார். அதுபோல் இந்தபடத்திலும் அறிமுகமாக இருக்கும் புதுமுகம் அச்சனின் பெயரையும் மாற்ற உள்ளாராம். இதனிடையே அன்னக்கொடியும் கொடிவீரனும் படத்தின் சூட்டிங் வருகிற 17ம் தேதி அதாவது நாளை வியாழக்கிழமை, தேனி மாவட்டம் அல்லிநகரத்தில் கோலாகலமாக துவங்க இருக்கிறது. படத்தின் துவக்க விழாவுக்கு இயக்குநர் சிகரம் பாலச்சந்தர், பாலுமகேந்திரா, மணிரத்னம் உள்ளிட்ட டைரக்டர் பங்கேற்க இருக்கின்றனர்
Post a Comment