சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில், தனது 22வது ஆண்டை இன்று நிறைவு செய்தார் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின்.
சர்வதேச போட்டிகளில் விளையாட வந்து 22 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார் சச்சின். கடந்த 1989ம் ஆண்டு இதே நாளில் 16 வயது இளம் பாலகனாக கராச்சி தேசிய ஸ்டேடியத்திலும், தனது டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையிலும் அடியெடுத்து வைத்தார் சச்சின். தற்போது தனது 38வது வயதில் 182 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 15 ஆயிரத்து 48 ரன்களும், 453 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 18 ஆயிரத்து 111 ரன்களும் எடுத்துள்ளார்.
சாதனை நாயகன் சச்சின் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார். தற்சமயம் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அதிக நாட்கள் விளையாடியவர்கள் வரிசையில் 9வது இடத்தில் உள்ளார் சச்சின்.
Post a Comment