உயிர் கொல்லி நோயான புற்று நோய் உலகை அச்சுறுத்தி வருகிறது. இந்த நோயை முற்றிலும் குணப்படுத்த இன்னும் மருந்து கண்டுபிடிக்கவில்லை. விஞ்ஞானிகள் தொடர்ந்து ஆராய்ச்சி நடத்தி தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் தற்போது கலிபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சர்வதேச விஞ்ஞானிகள் குழு புற்று நோயை முற்றிலும் அழிக்க கூடிய வீரியமான மருந்தை கண்டுபிடித்துள்ளனர்.
"கேஜி 5" என்றழைக்கப்படும் இந்த அதிசய மருந்து புற்று நோய் பாதித்துள்ள "செல்"களை முற்றிலும் அழிக்கும் தன்மை கொண்டது. இந்த மருந்து புற்றுநோய் செல்களை தற்கொலை செய்து கொள்ள செய்து அது மேலும் பரவாமல் தடுக்கும் சக்தி வாய்ந்தது. இந்த மருந்து இன்னும் 5 ஆண்டுகளில் செயல்பாட்டுக்கு வர உள்ளது.
இதுகுறித்து விஞ்ஞானி பேராசிரியர் டேவிட் செரேஷ் கூறும்போது, இந்த அதிசய மருந்து மாத்திரைகள் வடிவில் வழங்கப்பட உள்ளது. இது மிக சிறிதளவில் மட்டுமே பக்க விளைவுகளை ஏற்படுத்தும். ஆனால் புற்று நோய் மேலும் பரவாமல் முற்றிலும் குணமாக்கும் என்றார்.
Post a Comment