அவங்களை பார்த்து இவங்களா? இல்ல, இவங்களை பார்த்து அவங்களா? என்று குழம்ப போவது ரசிகன்தான். இப்படி ரசிகர்களை குழப்பப் போகிற படம் செப்டம்பர் 19. ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மானை வைத்து சில ஆல்பங்களை இயக்கியிருக்கும் பரத் பாலாவின் அடுத்த படம்தான் இந்த செப்டம்பர் 19. (செம்மொழியான தமிழ் மொழியாம் ஆல்பமும் அண்ணாத்தே கைவண்ணம்தான்) தென்னக மொழிகள் எல்லாவற்றிலும் இந்த படத்தை தயாரிக்க திட்டமிட்டிருக்கிறார் பரத் பாலா.
சரி. முதல் வரிக்கு வருவோம். இந்த படத்தின் கதையிலும் போதி தர்மர் போல ஒரு கேரக்டர் வருகிறது. இதில் நடிக்கதான் முதலில் கமல்ஹாசனை அணுகியிருந்தாராம் இந்த பரத் பாலா. கேரளாவின் புகழ்பெற்ற எழுத்தாளர் எம்.டி.வாசுதேவன் நாயரின் எழுத்தில் உருவாகவிருக்கும் இப்படத்தில் முதலில் நடிக்க சம்மதித்த கமல், ஆங்காங்கே சில திருத்தங்களை கூற, முதல் திருத்தமாக கமலையே தூக்கிவிட்டார்கள் படத்திலிருந்து.
இப்போது அஜய் தேவ்கான் நடிப்பில் இந்த படத்தை தொடர திட்டமிட்டிருக்கிறார்கள். இவருடன் அசினும் நடிக்கிறார். இந்த கதையின் 'நாட்'டைதான் அரைகுறையாக சுட்டு முருகதாஸ் 7 ஆம் அறிவை உருவாக்கிவிட்டதாகவும் ஒரு தகவல் பரவி வருகிறது கோடம்பாக்கத்தில். இந்த படத்தில் சூர்யாவுக்கு போதி தர்மர் வேடம். செப்டம்பர் 19 ல் அஜய் தேவ்கானுக்கு நாராயண் குருக்கள் வேடமாம்.
இந்தியாவின் மிக சிறந்த திரைக்கதை ஆசிரியரான எம்.டி.வாசுதேவ நாயரின் இந்த படைப்புக்கு தமிழில் வசனம் எழுதவிருக்கிறார் எழுத்தாளர் ஜெயமோகன். இப்படம் வெளிவந்த பின் குறையில்லாத 7 ஆம் அறிவை பார்த்த திருப்தி ரசிகர்களுக்கு ஏற்படுமோ என்னவோ?
Post a Comment