சிம்புவின் புது நாயகி
வெற்றி மாறனும் சிம்புவும் சேர்ந்து படம் பண்ணுகிறார்கள். வட சென்னை என்று பெயரிட்டுள்ளனர். தெலுங்கு நடிகர் ராணாவுக்கும் முக்கிய கேரக்டர் கொடுக்கின்றனர்.
சிம்பு ஜோடியாக அமலாபாலை தேர்வு செய்கின்றனர். ராணா ஜோடியாக ஆண்டரியா வருகிறார். ஒஸ்தி முடிந்ததும் பட வேலையை துவக்குகின்றனர்.
புது வீட்டில் நயன்தாரா
பிரபுதேவா நயன்தாரா திருமண ஏற்பாடுகள் மும்முரமாகியுள்ளன. அடுத்த வருடம் ஜனவரியில் மும்பையில் திருமணத்தை நடத்த முடிவாகியுள்ளதாம். அதன் பிறகு அங்கேயே தனிக்குடித்தனம் நடத்தப் போகிறார்களாம் இதற்காக மும்பையில் புது வீடு விலை பேசியுள்ளனர்.
ஸ்ருதிக்கு பதில் காஜல்
தெலுங்கில் ஜுனியர் என்.டி. ஆருடன் தம்மு என்ற படத்தில் கமல் மகள் ஸ்ருதியை ஜோடியாக சேர்த்தனர். ஏனோ அப்படத்தில் இருந்து ஸ்ருதி விலகிவிட்டார்.
அவருக்கு பதில் டாப்சி, கார்த்திகா, காஜல் அகர்வால் ஆகிய மூவரை பரிசீலித்தனர். இறுதியில் காஜல் அகர்வால் தேர்வாகியுள்ளாராம்.
தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு தமிழுக்கு வருகிறார். வெற்றிமாறன், சேரன் இருவரிடமும் கதை கேட்டுள்ளாராம்.
சேரன் கதை ரொம்ப பிடித்து போனதாம். அப்படத்தில் நடிப்பார் என்கின்றனர்.
Post a Comment