அஜீத்துடன் நடித்த மங்காத்தா படம் ரிலீசானதும் திரிஷா தெலுங்குக்கு போனார். அங்கு கங்கா படத்தில் நடித்து வருகிறார். இந்தியில் காட்டாமீட்டா தோல்விக்கு பின் புதுப்பட வாய்ப்புகள் வரவில்லை. எனவே தொடர்ந்து தமிழ், தெலுங்கு படங்களில் நடிக்க முடிவு செய்துள்ளார்.
தற்போது புதுமுகநாயகிகள் இரு மொழிப்படங்களிலும் கொடி கட்டி பறக்கின்றனர். ரசிகர்களிடம் புது முகங்களுக்கு வரவேற்பு இருப்பதால் இயக்குனர்கள் மும்பை கேரளாவுக்கு படையெடுத்து புது நாயகிகளை அழைத்து வருகின்றனர். இதனால் திரிஷா, அசின், ஸ்ரேயா போன்ற நடிகைகளின் மார்க்கெட் சரிந்துள்ளதாக பரவியுள்ளது.
இதன் தொடர்ச்சியாக திரிஷாவை தெலுங்கு படமொன்றில் அண்ணி வேடத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்து இருப்பதாக வதந்தி பரவியது. பட வாய்ப்புகள் இல்லாததால் அண்ணி கேரக்ட்டருக்கு இறங்கி வந்துள்ளதாகவும் கூறப்பட்டது. அப்படத்தில் வெங்கடேஷ், மகேஷ்பாபு என இரு நாயகர்கள் நடிக்கின்றனர்.
வெங்கடேஷ்பாபுவின் தம்பியாக மகேஷ்பாபு நடிக்கிறார். வெங்கடேஷ் மனைவி வேடத்தில் திரிஷா நடிக்கிறார். அதாவது மகேஷ்பாபுவின் அண்ணியாக வருகிறார் என்று செய்திகள் வெளியாயின.
இது பற்றி திரிஷாவிடம் கேட்ட போது வருத்தப்பட்டார். அவர் கூறியதாவது:-
மகேஷ்பாபு, வெங்கடேஷ் இணைந்து நடிக்கும் படத்துக்கு நான் ஒப்பந்த மாகவில்லை. எனவே மகேஷ்பாபுவின் அண்ணியாக நடிக்கிறேன் என்ற கேள்வியே எழவில்லை. விஷால் ஜோடியாக நடிக்கும் சமரன் படத்தில் எனக்கு நல்ல கேரக்டர் அமைந்துள்ளது. திறமையை காட்டுவதற்கு இப்படத்தில் நிறைய வாய்ப்புகள் உள்ளன.
Post a Comment