நாகை மாவட்ட்வேதாராண்யத்தைச் சேர்ந்த மீனவர்களைத் தடுத்து இலங்கை மீனவர் தாக்கி அட்டூழியம் செய்துள்ளனர். இதில் ஒருவரது கையில் கத்தியால் குத்திக் காயப்படுத்தியுள்ளனர். இதனால் நாகை மாவட்ட மீனவர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.
இலங்கை கடற்படைதான் ரவுடித்தனமாக நடந்து கொள்கிறது என்றால் இப்போது இலங்கை மீனவர்களும் மிருகத்தனமாக தமிழக மீனவர்களைத் தாக்கி அட்டூழியம் செய்ய ஆரம்பித்துள்ளனர். இந்த இரு காலிப் படையினரின் அட்டூழியங்களைத் தட்டிக் கேட்க ஒரு நாதியும் இல்லாததால், தமிழக மீனவர்கள் பெரும் இன்னலுக்குள்ளாகியுள்ளனர். கடலுக்குப் போனால் பத்திரமாக திரும்புவது சாத்தியமில்லாததாகி வருகிறது.
சமீப காலமாக அடுத்தடுத்து இலங்கைக் கடற்படையினரும், இலங்கை மீனவர்களும் தொடர்ந்து தமிழக மீனவர்களைத் தாக்கி காயப்படுத்தி வருகின்றனர். மீன்களை எடுத்து கடலில் வீசுவது, மீன்பிடி வலைகளை அறுப்பது, ஜிபிஎஸ், செல்போன் போன்றவற்றை திருடுவது என மகா மோசமாக நடந்து கொள்கின்றனர் இவர்கள். இதனால் தமிழக மீனவர்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.
இந்த நிலையில், நாகை மாவட்டம் வேதாராண்யத்தைச் சேர்ந்த அர்ஜூனன், விஜயபாலன், கந்தன் மற்றும் இன்னொரு மீனவர் என நான்கு பேர் கடலில் மீன்பிடிக்கச் சென்றனர். நேற்று காலை கடலுக்குப் போன இவர்கள் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு இலங்கை மீ்னவர்கள் வந்தனர்.
வந்தவர்கள், தமிழக மீனவர்களின் படகை மறித்து நிறுத்தி உள்ளே இறங்கி தாக்கத் தொடங்கினர். அப்போது ஒரு இலங்கை மீனவர் கத்தியால், அர்ஜூனனை குத்தியதில் அவரது கையில் படுகாயம் ஏற்பட்டது. மற்ற மூவரையும் சரமாரியாக அடித்துள்ளனர்.
இதையடுத்து நான்கு மீனவர்களும் படகுடன் வேகமாக கரைக்குத் திரும்பினர். ஆனால் கடல் சீற்றமாக காணப்பட்டதால் அவர்கள் கரைக்கு வர முடியாமல் தடுமாறினர். பின்னர் கரையில் உள்ள மீனவர்களுக்குத் தகவல் கொடுக்கவே கரையிலிருந்து மீனவர்கள் வேகமாக விரைந்து சென்று நால்வரையும் மீட்டுக் கரைக்குக் கொண்டு வந்தனர்.
படுகாயமடைந்த நிலையில் இருந்த அர்ஜூனனை வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அர்ஜூனின் உறவினர்களும், சக மீனவர்களும் பெருமளவில் மருத்துவமனையில் குவிந்துள்ளதால் அங்கு பரபரப்பு நிலவுகிறது.
Post a Comment