இந்த செய்தியில் இடம்பெற்றிருக்கும் உண்மைத்தன்மைக்கு நமது சுவிட்சர்லாந்து வாசகர்கள்தான் உத்தரவாதம் கொடுக்க வேண்டும். காரணம், நாம் கேள்விப்பட்ட தகவல் உண்மைதானா என்பதை அறிய பலமுறை ஜீவாவுக்கு போன் செய்துவிட்டோம். நாட் ரீச்சபுள் என்பதுதான் ஒரே பதிலாக இருக்கிறது.
நாம் கேள்விப்பட்ட செய்தி இதுதான். வருகிற ஜனவரி மாத புத்தாண்டு தினத்தன்று ஜீவாவும், அவருடன் சங்கீதா, அவரது கணவர் க்ருஷ் உள்ளிட்ட பல்வேறு நட்சத்திரங்கள் சுவிட்சர்லாந்தில் இருக்கப் போகிறார்கள். இவர்களுக்கு அங்கு பலமான விருந்து காத்திருக்கிறது. இவர்கள் செய்யப் போகும் வேலை?
அங்குள்ள தமிழர்களிடத்தில் அளவளாவி மகிழ்வதும், மகிழ்ச்சியூட்டுவதும்தான். இதிலென்ன தவறு என்கிறீர்களா? அடுத்த வரிக்கு வாருங்கள். இந்த விருந்தை ஏற்பாடு செய்திருப்பதே இலங்கை அரசின் வலது பாக்கெட்டில் அமர்ந்திருக்கிற கருணாதான் என்கிறார்கள்.
தெரிந்தேதான் செல்கிறார்களா, அல்லது தெரியாமல் செல்கிறார்களா என்பதுதான் நமது கேள்வி.
Post a Comment