News Update :
Home » » 'போனா போகட்டும் ஒரு பொம்பளன்னு பார்த்தா நீ ஊரை ஏய்க்க...': தேமுதிக பிரச்சாரத்தில் விஜயகாந்த் பாட்டு

'போனா போகட்டும் ஒரு பொம்பளன்னு பார்த்தா நீ ஊரை ஏய்க்க...': தேமுதிக பிரச்சாரத்தில் விஜயகாந்த் பாட்டு

Penulis : karthik on Saturday, 8 October 2011 | 03:15

 
 
 
 
 
கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்ற தேமுதிக, உள்ளாட்சித் தேர்தலில் உடன்பாடு எட்டாததையடுத்து, அக்கூட்டணியில் இருந்து விலகியது.
 
தமிழகத்தில் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் இணைந்து தனித்துப் போட்டியிட தேமுதிக முடிவு செய்தது.
 
 
இதையடுத்து தனது கட்சி வேட்பாளர்களையும், கூட்டணிக் கட்சி வேட்பாளர்களையும் ஆதரித்து விஜயகாந்த் தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்து வருகிறார். அவரைப் போலவே அவரது மனைவியும் நீங்கள் (விஜயகாந்த்) தெற்கே என்றால், நான் வடக்கே என்று பிரச்சாரம் செய்து வருகிறார்.
 
 
தேமுதிக வேட்பாளர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் தலைவர் பக்கத்தில் இல்லாத குறையைப் போக்க, அவர் நடித்த படங்களின் பாடல்களை ஒலிக்க செய்து, தொண்டர்களை உற்சாகப்படுத்துகின்றனர்.
 
 
சென்னை வளசரவாக்கத்தில் இன்று (08.10.2011) காலை தேமுதிக சார்பில் மேயர் வேட்பாளராக போட்டியிடும் வேல்முருகன் பிரச்சாரத்தை துவங்கினார். அவர் பிரச்சாரம் மேற்கொண்ட வாகனத்தில், விஜயகாந்த் நடித்த சின்னக்கவுண்டர் படத்தில் வரும்,
 
 
''சுட்டி சுட்டி உன் வால கொஞ்சம் சுருட்டிக் கொள்ளடி... வட்டி வட்டியும் முதலுமா வாங்கிக்கொள்ளடி... போனா போகுது ஒரு பொம்பளன்னு பார்த்தா நீ ஊரை ஏய்க்க பார்ப்பதென்னடி... வீணா வரிஞ்சிக்கட்டி வம்பிழுத்ததாலே இப்போது மாட்டிக்கிட்டு முழிப்பதென்னடி...'' என்ற பாடல் ஒலிப்பரப்பட்டது. இந்த பாடல் ஒலிப்பரப்பட்டபோது, பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த தேமுதிக தொண்டர்கள் ஆரவாரம் செய்தனர்.



Share this article :

Post a Comment

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger