கொழும்பு மக்களை வன்னியில் குடியேற்றுவதற்கு அரசாங்கம் முனைப்பு காட்டி வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.கொழும்பில் காணப்படும் 90000 வீடுகளை உடைப்பதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.நாளைய தினம் நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்றத் தேர்தலில், வாக்காளர்கள் அரசாங்கத்திற்கு நல்ல பாடகம் புகட்ட வேண்டுமென இன்றைய தினம் கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ஜனநாயக உரிமைகளை உறுதிப்படுத்துவதற்கு அரசாங்கத்தை வலியுறுத்த வேண்டுமாயின் இந்தத் தேர்தலில் மக்கள் ஐக்கிய தேசியக் கட்சிக்குஆதரவாக்க வாக்களிக்க வேண்டுமென தெரிவித்துள்ளார்.மக்கள் சிறந்த வாழ்க்கையை எதிர்பார்ப்பதாக அரசாங்கத்திற்கு தெரியப்படுத்தும் சந்தர்ப்பமாக இந்த வாக்கெடுப்பினை பயன்படுத்த முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.முச்சக்கர வண்டி சாரதிகள் மற்றும் நடைபாதை வியாபாரிகளின் வாழ்வாதாரங்களை இல்லாதொழிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கொழும்பு வறிய மற்றும் செல்வந்தர்கள் என்ற பல்வேறு சமூகத்தினரைக் கொண்டமைந்தது எனவும், இந்த சமூகக் கட்டமைப்பில் மாற்றம் ஏற்படுத்தப்பட வேண்டிய அவசியமில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.மருத்துவர்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்படுவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.
Post a Comment