சுவிட்சர்லாந்தில் உள்ள வங்கிகளில் போடப்பட்டு இருக்கும் கறுப்பு பணம் பற்றிய விவரங்களை அறிவது தொடர்பாக அந்த நாட்டுடன் இங்கிலாந்து பேச்சு வார்த்தை நடத்தியது.
அதன் தொடர்ச்சியாக, சுவிஸ் வங்கிகளில் இங்கிலாந்தை சேர்ந்தவர்கள் போட்டு வைத்துள்ள பணம் பற்றிய தகவல்களை அளிக்க சுவிட்சர்லாந்து ஒப்புக் கொண்டது.
அதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் (வரி தவிர்ப்பு ஒப்பந்தம்) நேற்று கையெழுத்தானது. இந்த ஒப்பந்தம், 2013-ம் ஆண்டு முதல் அமலுக்கு வரும்.
சுவிஸ் வங்கிகளில் இங்கிலாந்தைச் சேர்ந்தவர்களின் பணம் மொத்தம் ரூ.9 லட்சத்து 60 ஆயிரம் கோடி வரை இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
Post a Comment