ஆஸ்திரேலியாவில் 2008-ம் ஆண்டில் 12 ஆயிரத்துக்கும் அதிகமான டீன்ஏஜ் பெண்கள் குழந்தை பெற்றுள்ளனர். நாடு முழுவதும் 16-25 வயதுக்கு உட்பட்ட இளைஞர்களில் 5% பேருக்கு பால்வினை நோய் இருக்கிறது என்று புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. இதுதொடர்பாக 'ஆரோக்கியமான செக்ஸ் உறவு ஆய்வு குழு' என்ற அமைப்பு தீவிர ஆய்வு மேற்கொண்டது. ஆய்வு குழு தலைவர் பேராசிரியர் ஆலன் மெக்கீ கூறியதாவது:
புத்தகம், டிவி, இன்டர்நெட் மூலமாக சிறுவர்கள், இளைஞர்கள் செக்ஸ் பற்றி அரைகுறையாக தெரிந்துகொள்கின்றனர். இது ஆபத்தானது. போதிய பாதுகாப்பு இல்லாமல் ஏதோ ஒரு ஈர்ப்பின் காரணமாக செக்ஸில் ஈடுபட்டு நோய்களை வரவழைத்துக் கொள்கின்றனர்.பிள்ளைகளிடம் பெற்றோர் மனம் விட்டு, வெளிப்படையாக பேசக்கூடியவர்கள். குழந்தைகளுக்கு செக்ஸ் கல்வியை பெற்றோர்தான் சிறப்பாக கற்றுத்தர முடியும்.
உரிய வயதில் செக்ஸ் பற்றி முழுமையாக தெரிந்து கொள்வதால், அவர்கள் வழி தவறவோ, நோய்களால் பாதிக்கப்படவோ வாய்ப்பு குறையும். இவ்வாறு ஆலன் கூறினார். செக்ஸ் தொடர்பாக இங்கிலாந்தில் ஒரு சர்வே எடுக்கப்பட்டது. ''பெற்றோர் மூலமாக 6% சதவீத பிள்ளைகள் மட்டுமே செக்ஸ் பற்றிய விழிப்புணர்வு பெறுகின்றனர். பள்ளியில் செக்ஸ் கல்வி மூலமாக 13% பேரும், இதர வழிகளில் 81% பேரும் தெரிந்துகொள்கின்றனர்'' என்கிறது அந்த சர்வே.
Post a Comment