கடந்த தீபாவளியன்று நான் நடித்த 'மைனா' ரிலீஸ் ஆனது. இந்த வருடம் தீபாவளியன்று எனது பிறந்த தினம் வந்தது. 'மைனா'வுக்கு பிறகு எனது
வாழ்க்கை முற்றிலுமாக மாறிவிட்டது. இண்டஸ்ட்ரியில் சில நல்ல நண்பர்கள் கிடைத்திருக்கிறார்கள். தற்போது மலையாளத்தில் டாக்டர் பைஜு இயக்கும் படத்தில் நடித்து வருகிறேன்.
இதன் ஷூட்டிங் அந்தமானில் நடக்கிறது. பிருத்விராஜ், இந்திரஜித் நடிக்கின்றனர். 'முப்பொழுதும் உன் கற்பனைகள்' படத்துக்காக அமெரிக்கா செல்கிறேன்.
டைரக்டர் விஜய்யுடன் காதல், நெருக்கமாக பழகுகிறார் என்று என்னைப் பற்றி வதந்திகள் வருகிறது. நீண்ட நாட்களாக இந்த பேச்சு இருந்து வருகிறது. மீடியா என் படங்களைபற்றி, அதில் எனது நடிப்பு குறித்து மட்டும் பேசட்டும். சொந்த வாழ்க்கையில் தலையிடுவதை ஏற்க முடியாது. இவ்வாறு அமலாபால் கூறினார்.
home
Home
Post a Comment