சிங்கம் வெளியே வர ஆரம்பித்துவிட்டது. மருத்துவ சிகிச்சையை முடித்துக் கொண்டு சிங்கப்பூரிலிருந்து திரும்பிய ரஜினி, அதன்பின் வெளியே எங்கும் வராமலே இருந்தார். கடந்த சில தினங்களுக்கு முன் திருப்பதி பெருமாள் கோவிலுக்கு குடும்பத்தோடு வந்திருந்து எடைக்கு எடை கற்கண்டு செலுத்தினார் ரஜினி. இப்போது நாம் சொல்லப் போவது அதே மாதிரியான ஒரு இனிப்பான செய்திதான்.
நேற்று நுங்கப்பாக்கம் லேக் ஏரியாவில் அமைந்திருக்கும் ஃபோர் பிரேம்ஸ் தியேட்டருக்கு தனது மகள் ஐஸ்வர்யாவுடன் வந்திருந்தார் ரஜினி. பிற்பகல் மூன்று மணிக்கு அவர் வரப்போவதாக தியேட்டர் நிர்வாகி கல்யாணத்திற்கு தகவல் வர, அவரும் பரபரப்பாக காத்திருந்தார். மிக சரியாக மூன்று மணிக்கு காரில் வந்திறங்கிய ரஜினி, அதே துள்ளல் நடையுடன் துடிப்பான ஸ்டைலுடன் தியேட்டருக்குள் சென்றாராம்.
ரஜினியின் இந்த வருகை 7 ஆம் அறிவு திரைப்படத்தை காண்பதற்காகதான். சூப்பர் ஸ்டாரை வரவேற்க படத்தின் நாயகன் சூர்யாவும், அவரது மனைவி ஜோதிகாவும் காத்திருந்தார்கள். பின்பு படம் முடியும் போது மீண்டும் வந்த இருவரும் ரஜினியின் பாராட்டுதல்களை கேட்டு நெஞ்சமெல்லாம் பூரித்தது தனி சந்தோஷம்.
Post a Comment