வெள்ளைப்படுதல் என்பது பெரும்பாலும் பெண்களுக்கு மட்டும் உரியபிரச்சினையாக பார்க்கப்படுகிறது.இது ஆண்களுக்கும் ஏற்படும்.வழக்கமாக மாதவிலக்குக்கு முன்பும் பின்பும் அல்லது கர்ப்பகாலத்தில் பெண்களுக்கு லேசாக வெள்ளைப்படுவது இயல்பானது.பலரும்இதை உடல் சூடாகி விட்ட்து என்பார்கள்.ஆனால் இது பால்வினை நோயாக இருப்பதற்கானநம்பிக்கை அதிகம்.
நிரூபன் வெள்ளைப்படுதலுக்கு எள்ளுருண்டை சாப்பிடலாம் என்று ஒரு பதிவுஎழுதியிருக்கிறார்.எள்ளுருண்டை எனக்கு மிகவும் பிடித்த உணவுப் பண்டம்.உருண்டைபிடிக்க எளிதாக சில இடங்களில் அடை சுட்டும் இதில்சேர்ப்பார்கள்.நிலக்கடலை,பொட்டுக்கடலை,முந்திரி சேர்ப்பதும் உண்டு.சாப்பிட அப்படிஒரு சுகம்.
வெள்ளைப்படுதல் உடல் சூட்டால் வருகிறது என்ற நம்பிக்கையொட்டி இந்தஎள்ளுருண்டை சாப்பிடுவதும் ஏற்பட்டிருக்கலாம்.எள் குளிர்ச்சி என்று கருதுவதால்சாப்பிட ஆரம்பித்திருக்க வாய்ப்பிருக்கிறது.முன்பே சொன்னது போல சாதாரணமாக ஏற்படும்நீர்க்கசிவு தானாகவே சரியாகி விடும்.பால்வினை நோயாக இல்லாதவரை பிரச்சினை இல்லை.
வழக்கத்துக்கு மாறாக அதிக அளவிலோ,நமைச்சல் எரிச்சலுடனோ,துர்நாற்றத்துடனோவெள்ளைப்படுதல் இருந்தால் அது நிச்சயம் பால்வினை நோய்.பாக்டீரியா,பூஞ்சை போன்றநுண்ணியிரிகள்(micro organisms) ஒருவரிடமிருந்துஒருவருக்கு தொற்றி இருக்கலாம்.உடல் சூடு போன்ற தவறான கருத்துக்களால் சிகிச்சைக்குஅணுகுவது குறைவாக இருக்கிறது.
இத்தைகைய நீர்க்கசிவை ஒரே வகையில் அடக்கிவிட முடியாது.அதே சமயம்எல்லாமும் பால்வினை நோயல்ல! கருப்பை சார்ந்த இடங்களில் நோய்த்தொற்று ஏற்பட்டாலும்உண்டாகும்.சுத்தமில்லாமல் இருந்தால் குழந்தைகளுக்கும் பரவும்.வெள்ளைப்படுதல் என்றுபொதுவாக சொன்னாலும் அறிகுறிகளிலேயே வகைகளை கண்டறிந்து சிகிச்சை அளிப்பதுவழக்கத்தில் இருக்கிறது.
நமைச்சலுடன் வெள்ளைப்பட்டால் அதுபூஞ்சைத்தொற்றாக (candidiasis)இருக்கலாம்.curdy type என்று சொல்வார்கள்.கெட்டியான திரவம் வெளியாகும்.துர் நாற்றத்துடன்வெளியாகும் நீர்க்கசிவு (டிரைகோமோனியாஸிஸ்)இன்னொரு வகை.கொனேரியாஎன்ற நோயில் சிறுநீர்க்கழிக்கும்போது கடுமையான வலியுடன் அல்லது சாதாரணமாகஇருக்கலாம்.ஆண்களுக்கு வரும் வெள்ளைப்படுதல் இந்நோயாகவும் இருக்கலாம்.ஆண்களுக்குபழுப்பு நிறத்தில் திரவம் வெளியாகும்.
மேலே குறிப்பிட்ட கொனேரியா(இப்போது ஆண்டிபயாடிக் மருந்துகளுக்குகட்டுப்படுவதில்லை என்று சொல்கிறார்கள்) தொற்றில் பழுப்பு நிற திரவம் வெளியாவதுநின்றுவிடுவதும் சாத்தியம்.அப்போது நோய் குணமாகிவிட்ட்தாகநினைத்துக்கொள்வார்கள்.ஆனால் உண்மையல்ல! அறிகுறி இல்லாமல் நோய்த்தொற்று இருந்துகொண்டிருக்கும்.எள்ளுருண்டை தின்று நோய் குணமாகிவிட்ட்தாக நினைத்துக்கொள்வதன்விபரீதம் இப்போது புரிந்திருக்கும்.
ஆண்கள் பலருக்கு கிருமித்தொற்று இருந்தாலும் அறிகுறிகள் வெளியேதெரிவதில்லை.அதனால் எனக்கு ஒன்றுமில்லை என்று சிகிச்சைக்கு மறுப்பார்கள்.ஆனால்காரணமே பெரும்பாலும் அவர்கள்தான்.இருவரும் சிகிச்சை எடுத்துக்கொள்ளாவிட்டாலும்மீண்டும் தொற்று ஏற்படும்.பாதுகாப்பில்லாத பாலுறவு மூலம் இத்தகைய வியாதிகள்பரவுவதால் எய்ட்ஸ் தொற்றும் பாதிப்பும் இவர்களுக்கு அதிகம்.
Post a Comment