News Update :
Home » » இரவு நேரத்துக்கு ஏற்ற உணவுகள்

இரவு நேரத்துக்கு ஏற்ற உணவுகள்

Penulis : karthik on Thursday, 29 September 2011 | 04:42

 
 
ஜீரண மண்டலங்கள் எப்போது சிறப்பாக இயங்கும்? வேலை செய்யும்போதா?ஓய்வாக இருக்கும்போதா? தூங்கும்போது அவற்றின் செயல்பாடு எப்படி இருக்கும்?இவற்றுக்கான விடையை உங்களால் எளிதில் சொல்லிவிட முடியும்.ஆமாம்,உறக்கத்திலும்,ஓய்வுநிலையிலும் செரிமானத்தின் ஆற்றல் மிதமாக இருக்கும்.
 
இரவு நேரத்தில் எப்படிப்பட்ட உணவுகளை சாப்பிட வேண்டும் என்று இப்போதுபுரிந்திருக்கும்.எளிதாக ஜீரணம் செய்யத்தகுந்தவையாக இருக்க வேண்டும்.அசைவம்உள்ளிட்ட கொழுப்பு உணவுகள் தவிர்க்கப்பட வேண்டியவை.பழங்கள் போன்ற நார்ச்சத்துள்ளஉணவுகளை சேர்த்துக் கொள்ளலாம்.
ராத்திரி பொழுதுகளில் வயிற்றை சங்கடப்படுத்தும் உணவுகள் தூக்கத்தையும்பாதிக்கின்றன.தூக்கம் பாதிக்கப்பட்டாலே உடலில் நோய்களுக்கான வாசல் திறக்கப்பட்டுவிட்ட்து என்று அர்த்தம்.வாயுவை உண்டாக்கும் கிழங்கு வகைகள்,அதிக பருப்புகள்,முட்டை,முட்டைக்கோஸ்,காலிஃபிளவர்ஆகியன பலருக்கு நல்ல உறக்கத்தை கெடுக்கும்.
அசைவ உணவுகள் எளிதில் செரிப்பவை அல்ல! ஆனால் இரவு நேரங்களில்தான் அசைவ உணவுவகைகளும்,மற்ற கொழுப்பு நிறைந்த உணவு வகைகளும் அதிகம் விற்பனையாவதாக ஹோட்டல்நட்த்துபவர்கள் சொல்கிறார்கள்.மதுப் பிரியர்கள் ஒரு காரணம் என்றால் இன்றையவாழ்க்கை முறையும் அப்படித்தான்.
 
உள்ளூரில் தொழில்நட்த்தும் ஒருவர் பேசிக் கொண்டிருந்தார்."நைட்லதான் சார் நிம்மதியா உட்கார்ந்துசாப்பிட முடிகிறது,ருசி பார்த்து சாப்பிடறதும் அப்போதான்" காலையில் அரக்க பரக்க வெந்த்தையும்,வேகாத பண்ட்த்தையும் வாயில்திணித்துக் கொண்டு பறக்க வேண்டியிருக்கிறது.பிள்ளைகளுக்கு தயார் செய்ய வேண்டும்,அலுவலகத்துக்கு,தொழிலுக்குதயாராக வேண்டும்.இந்நேரத்தில் மதிய உணவையும் அவ்வளவு சிறப்பாக தயார் செய்யமுடிவதில்லை.
குடும்பத்தோடு ஒரு நாளைக்கு ஹோட்டலில் சாப்பிடலாம் என்ற பழக்கம் அதிகரித்துவருகிறது.இது பெரும்பாலும் இரவு நேரங்களில் இருக்கும்.தின்பதும் அதிக மசாலாசேர்க்கப்பட்ட கொழுப்பு வகைகளையும்,மைதாவால் செய்யப்பட்ட பண்டங்களையும்தான்.மைதா நீரிழிவைதூண்டுகிறதென்று கேரளாவில் இயக்கம் நட்த்தி விழிப்புணர்வு ஏற்படுத்திவருகிறார்கள்.தென்னிந்தியாவில் இதன் பயன்பாடு அதிகம் என்கிறார்கள்.
 
நொறுக்குத்தீனிகளை உண்பதும் மாலை நேரங்களில்தான்.வயிற்றுப் புண்ணிலிருந்துநீரிழிவு வரையிலான பிரச்சினைகளுக்கு காரணம் நமது பழக்கங்கள்தான்.இவை தொடர்ந்துஅதிகரித்துக் கொண்டிருக்கின்றன.மருந்துக்கடைகளில் கூட்டம் அதிகமாகிக் கொண்டிருக்கிறது.இவற்றுக்குராத்திரி நேரத்து உணவுகளுக்கு அதிகம் பங்கிருக்கிறது.
தொலைக்காட்சி வரவுக்குப் பிறகு தூங்கும் நேரமும் வெகுவாக குறைந்துவிட்ட்து.இன்று சராசரியாக தூங்கப்போகும் நேரம் பல வீடுகளில் இரவு பன்னிரண்டுமணி.இதன் விளைவுகளை உணர்ந்து திருத்திக் கொள்பவர்கள் பாக்கியவான்கள்,அவர்கள் நல்லஆரோக்கியம் பெறுவார்கள்.
Share this article :

Post a Comment

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger