உணர்ச்சிகள் எண்பது கூரான கத்தி.முறையாக பயன்படுத்தினால் நன்மையைத் தரும்.இல்லாவிட்டால் வாழ்வில் நாசத்தை ஏற்படுத்தும்.உணர்ச்சிகள் தூண்டப்படும்போது நம் உடலில் நடக்கும் மாற்றங்கள் என்ன? நகைச்சுவை உணர்ச்சி மிகுந்திருக்கும்போது மனம் லேசாகி பார்ப்பவைஎல்லாம் அழகாகத் தெரியும்.உடலில் செரிமான சக்தி அதிகரிக்கும்.அன்பு,கருணை போன்ற உணர்ச்சிகளிலும் நன்மைதான்.கோபம் ,பொறாமை போன்ற உணர்ச்சிகளின் நிலையை சிந்தித்துப்பாருங்கள்.அப்போது நடப்பது எதுவும் நல்ல விளைவுகளை தருவதில்லை.
கோபம் தற்காலிக பைத்தியம் என்று சொன்னார்கள்.உண்மையில் பைத்தியத்தில் மற்றவர்கள் பரிதாபமாவது கிடைக்கும்.கோபத்தில் ஒட்டுமொத்த வாழ்வும் நாசமாகி விடும் வாய்ப்புகள் உண்டு.அதைப்பற்றி சொல்லிக்கொண்டே போகலாம்.பொறாமை பற்றி ஒரு பதிவும் தந்திருக்கிறேன்.பதிவரை பற்றி இ மெயில் அனுப்பியவரிடம் நான் கேட்டேன்"என்ன உணர்ச்சியை தூண்டுவதற்காக மெயில் அனுப்பப்பட்டது?'' உண்மையில் என்னிடம் வெறுப்பு தூண்டப்பட வேண்டும்.
பயம்,கோபம் ,பொறாமை,வெறுப்பு ,குற்ற உணர்வு,கலக்கம் போன்றவை பசியின்மையிலிருந்து தூக்கத்தை கெடுப்பது வரை மோசமான மனநிலைக்கும் உடல்நிலைக்கும் இட்டுச்செல்லும்.நாடித்துடிப்பு,(pulse rate) ரத்த அழுத்தம் (blood pressure) அதிகரிக்கும்.உணர்ச்சிகள் மேலாண்மை (Emotional intelligence)பற்றி இப்போது நல்ல விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது.வாழ்க்கையை நல்லவண்ணம் வாழ்வதற்காக மட்டுமல்லாது நல்ல வேலையைப் பெறவும் முக்கியம்.வேலைக்கான நேர்முகத்தேர்வுகளில் அதிகம் கவனிக்கப்படும் விஷயம்,ஒருவர் உணர்ச்சிகளை கையாளும் திறன் தான்.
பாரதியார் உணர்ச்சிகளைப்பற்றி குறிப்பிடும்போது கோபம்,தாபம்,கவலை,அச்சம் போன்றவற்றை வென்று விட்டால் சாவையும் வெல்லலாம் என்கிறார்.நாடியிலே அதிர்ச்சி ஏற்பட்டு மரணம் ஏற்படுவதாக ஜெகதீஷ் சந்திரபோஸ் கூறியதை மேற்கோள் காட்டி ,கோபம் முதலான உணர்ச்சிகள் நாடியில் அதிர்ச்சி ஏற்படுத்தும் ,அதனால் உணர்ச்சிகளை கட்டுப்படுத்தினால் சாவை வெல்வது சாத்தியமாகும் என்கிறார்.உணர்ச்சிகளின் விளைவுகளை உணர்வதும் ,சிந்திப்பதும்தான் முதல் படி.பாரதியாரின் நினைவு தினத்தை அனுசரிக்கும் பொருட்டு ஒரு சில வரிகள் உங்கள் சிந்தனைக்காக கீழே !
ஜகதீச சந்த்ரவஸு கூறுகின்றான்

(ஞானானு பவத்திலிது முடிவாம் கண்டீர்!)
"நாடியிலே அதிர்ச்சியினால் மரணம்" என்றான்
கோபத்தால் நாடியிலே அதிர்ச்சியுண்டாம்;
கொடுங்கோபம் பேரதிர்ச்சி;சிறியகோபம்
ஆபத்தாம் அதிர்ச்சியிலேசிறியதாகும்;
அச்சத்தால் நாடியெலாம் அவிந்துபோகும்;
தாபத்தால் நாடியெலாம் சிதைந்துபோகும்;
கவலையினால் நாடியெலாம் தழலாய்வேகும்;
கோபத்தை வென்றிடலே பிறவற்றைத்தான்
கொல்வதற்கு வழியென நான்குறித்திட்டேனே.
Post a Comment