சில வலைப்பதிவுகளைப் படிப்பது வாழ்க்கையில் எந்தமாதிரியெல்லாம் கஷ்டம்தரும் என்பதற்கு இந்த சம்பவம் ஒரு உதாரணம்.கல்யாணமாகாத இளம்பெண்ணென்றால்சொல்லத்தேவையில்லை.பல்லைக்கடித்துக்கொண்டு படித்தால் கொஞ்சம் கொஞ்சமாக புரியும்.விவரமாகச்சொல்கிறேன்.
தனக்குக் கல்யாணமாகவில்லை என்று மனம் நொந்து எழுதிய பதிவை படித்தார் அந்தஇளம்பெண்.என்ன நேரத்தில் படித்த்தோ தெரியவில்லை.அவ்வளவு நாளும் கல்யாணத்தின் மீதுஇருந்த வெறுப்பு மாயமாய் மறைந்து விட்ட்து.கல்லும் கரையும் என்பார்களே? இங்கேகரைந்து கடலில் கலந்து விட்ட்து.பெண்ணுக்கு காதலும்,கல்யாண ஆசையும் துளிர்த்துவிட்ட்து.
ஆசைஆசையாய் வலைப்பதிவருக்கு தனது காதலை இல்லை,உயிரையே கொட்டி எழுதினார்காதல் கடிதம்.கல்யாணத்திற்கு அழைப்பாகவும் கருதலாம்.அந்தக் கடிதம் கீழே!
அன்பே,
உங்களைப் பார்ப்பதற்காக தூங்காமல் காத்திருப்பேன்.குளிக்காமல்உட்கார்ந்திருப்பேன்.நீங்கள் பெண் பார்க்க வரும் வரை வாசலை விட்டு எழுந்து உள்ளேபோக மாட்டேன்.நீங்கள் எதற்காக பதிவு எழுத வேண்டும்? நான் ஏன் அதை விடிகாலையில்படிக்கவேண்டும்? இப்போது புரிந்துவிட்ட்தா? இருவருக்கும் கல்யாணமாகவில்லை.இனிநீங்களில்லாமல் என்னால் நடக்க முடியாது,ஓட முடியாது,கோலம் போட முடியாது! கீழ்கண்டமுகவரிக்கு உடனே வரவும்.
இளம்பெண் பழசை மறக்காதவர்.தான் வளர்க்கும் புறா காலில் கட்டி பதிவரிடம்தனது கடித்த்தை சேர்க்குமாறு அனுப்பினார்.கடித்த்தை படித்த பதிவருக்கு தலைசுற்றாமலா இருக்கும்.ஆஹா! நம்முடைய எழுத்தையும் படித்து நம்முடைய அறிவில் மயங்கிஒரு பெண்ணுக்கு வந்த காதல்!
கடிதம் கிடைத்த்வுடன்புறப்ப்ட்டு முகவரி கண்டு பிடித்து ஊர் போய் சேர்ந்து விட்டார்.உண்மையில் அந்தபெண்ணும் வாசலில்தான் இருந்த்து.பதிவருக்கு அதைப் பார்க்க எப்படி இருந்திருக்கும்என்று கற்பனை செய்து பாருங்கள்!ஆமாம்,உலகத்தில் இருக்கும் அத்தனை காதலும் அவருக்குவந்து விட்ட்து.அவர்களது காதலையும்,உணர்ச்சிவேகத்தயும் கண்ட காக்கைகள் அலறிஅடித்து ஓடின.
வீட்டுக்குள்ளே அழைத்துச்சென்றவுடன் உங்களிடம் நான் நிறைய பேச வேண்டும்என்றார் பெண்.''தாராளமாக! அதற்குத்தானே வந்திருக்கிறேன்!"
''உங்களுக்கு வடிவேல் பிடிக்குமா? விவேக்கா?''
இதுஎதற்கு என்று பதிவருக்கு தோன்றினாலும்சொல்லி வைத்தார்,''வடிவேல்"
"ச்சீநீங்கள் ரொம்ப மோசம்,எனக்கும்தான்! பாவம் போக்கிரியில் அசினை உயிருக்குஉயிராக காதலிப்பார்,நடுவில் விஜய் வந்து கெடுத்து விட்டார்.அவர் மனசு எப்படிஇருந்திருக்கும்?''நகைச்சுவை உணர்வு நிரம்பியவர் என்று பதிவருக்கு தோன்றியது.
''உங்களுக்குசமைக்கத்தெரியுமா?''ஆண்கள் சமைத்தால் ருசியாக இருக்கும் என்று என் தோழி சொன்னாள்.''
இந்தஅதிரடியை நம்ம ஆள் எதிர்பார்க்கவில்லை! " தெரியாது" என்றார்
"நீங்கள் கவலைப்படவேண்டாம்,எள்ளுருண்டை செய்ய உங்களுக்குத்தெரியும்தானே? அது போதும்.நான் தினம் இரண்டு எள்ளுருண்டை மட்டும் சாப்பிட்டு உயிர்வாழ்வேன்"
பதிவருக்குகுழப்பம் வந்தாலும் விடவில்லை."உயிர்வாழ்வது எங்கே! என் உயிரை எடுப்பாய்! அதில் இரண்டு வைட்டமின் தான்இருக்கிறது,வைட்டமின் சி இல்லை.அது நல்லதுதான்.ஆனால் மற்ற உணவும் வேண்டும்.நிரூபன்பதிவை படித்தீர்களா? சலிப்புடன் கேட்டார்.
"உங்களுக்குநகைச்சுவை உணர்வு அதிகம் என்று எனக்குத் தெரியும். நீங்கள் நிரூபன் இல்லாமல் வேறுயாராம்?"
"என்னது?நான் நிரூபன் இல்லை! நீ நிரூபனை காதலிக்கிறாயா?"
"ஆமாம்,நான்அவருக்குத்தான் கடிதம் எழுதினேன்," என்றார் அதிர்ச்சியுடன்.
பதிவர் மயக்கம்போட்டு பெண்ணின் காலடியில் விழுந்துவிட்டார்."நீங்கள் காலில் விழுந்தாலும் நான் நிரூபனைத்தான் காதலிப்பேன்" இவ்வார்த்தை பதிவரின் காதில் விழவில்லை.மயங்கிக் கிடந்தார்.புறாஓரமாக நின்று சிரித்துக்கொண்ட்து.காமெடி செய்யலாம் என்று திட்டமிட்டு வேறுபதிவரிடம் கடித்த்தை கொடுத்துவிட்ட்து..
டிஸ்கி: பதிவர்கள்,அதிலும் கல்யாணமாகாதவர்கள் பிளாக்கில் போட்டோ போடவேண்டும்.
Post a Comment