News Update :
Home » » பாராளுமன்றத்துக்கு முன் கூட்டியே தேர்தல் வருமா?: முலாயம் சிங், மாயாவதி தீவிரம்

பாராளுமன்றத்துக்கு முன் கூட்டியே தேர்தல் வருமா?: முலாயம் சிங், மாயாவதி தீவிரம்

Penulis : karthik on Tuesday 18 September 2012 | 01:12


பாராளுமன்றத்துக்கு முன் கூட்டியே தேர்தல் வருமா?: முலாயம் சிங், மாயாவதி தீவிரம் பாராளுமன்றத்துக்கு முன் கூட்டியே தேர்தல் வருமா?: முலாயம் சிங், மாயாவதி தீவிரம்

புதுடெல்லி, செப். 18- பிரதமர் மன்மோகன்சிங்கின் 5 ஆண்டு பதவிக்காலம் 2014-ம் ஆண்டு முடிவடைகிறது. பாராளுமன்றத்துக்கு தேர்தல் நடத்த தலைமை தேர்தல் கமிஷனுக்கு இன்னும் 17 மாதங்கள் கால அவகாசம் உள்ளது. இந்த நிலையில் சமீப காலமாக மத்திய அரசு, பிரச்சினைக்கு மேல் பிரச்சினைகளை சந்தித்து வருகிறது. விலைவாசி உயர்வு மற்றும் பல்வேறு ஊழல்கள் மத்திய அரசு மீது மக்களிடம் கடும் அதிருப்�® �ியை ஏற்படுத்தி உள்ளது. இதனால் காங்கிரசுக்கு ஆதரவு கொடுக்கும் கூட்டணி கட்சிகள் தங்கள் நிலையை மாற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக பாராளுமன்றத்துக்கு முன்கூட்டியே தேர்தல் வரும் என்று கூறப்படுகிறது. காங்கிரஸ் தலைவர்கள் அதற்கு வாய்ப்பு இல்லை என்று கூறி வருகிறார்கள். ஆனால் தேர்தல் எந்த நேரத்திலும் வரலாம் என்ற சூழ்நிலை உருவாகத் தொடங்கியுள்ளது. மக் கள் மத்தியில் கடும் வெறுப்பை சம்பாதித்துள்ள காங்கிரஸ், முன்கூட்டியே தேர்தலை நடத்த விரும்பவில்லை. ஆனால், முன்கூட்டியே தேர்தலை நடத்தினால்தான், அது தங்களுக்கு சாதகமாக இருக்கும் என்று பாரதீய ஜனதா தலைமையில் உள்ள எதிர்க்கட்சிகள் நினைக்கின்றன. காங்கிரஸ் கட்சிக்கு சாதகமாக இருக்கும் சில கட்சிகளும் முன்கூட்டியே தேர்தல் நடத்த வேண்டும் என்று விரும்புகின்றன. குறிப்பாக �® �ாங்கிரசுக்கு பக்கபலமாக உள்ள முலாயம்சிங் யாதவும், மாயாவதியும் முன்கூட்டியே தேர்தல் வரும் பட்சத்தில் அதை எதிர் கொள்வதற்கு வசதியாக எல்லா ஏற்பாடுகளையும் செய்து வருகிறார்கள். இதனால் வட மாநிலங்களில் பாராளுமன்ற தேர்தல் பற்றிய பேச்சு தீவிரமாகியுள்ளது. பாராளுமன்றத் தேர்தலை பொறுத்தவரை உத்தரபிரதேசம், பீகார், ஆந்திரா, மராட்டியம், கர்நாடகா போன்ற பெரிய மாநிலங்களில் எந்த கட்சிக்கு அதிக இடம் கிடைக்கிறதோ, அந்த கட்சியே மத்தியில் ஆட்சி அமைக்கும் வாய்ப்பை வலுவாக்கிக் கொள்ள முடியும். குறிப்பாக உத்தரபிரதேசத்தில் உள்ள 80 தொகுதி வெற்றி-தோல்வி மத்திய அரசு அமைப்பதில் முக்கியப் பங்கு வகிக்கும். எனவே அந்த 80 தொகுதிகளில் பெரும்பாலானவற்றில் வெற்றி கனியைப் பறிக்க வேண்டும் என்பதில் முலாயம்சிங் யாதவின் சமாஜ்வாடி கட்சிக்கும், மாயாவதியின் பகுஜன் �® �மாஜ் கட்சிக்கும் இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. முலாயம்சிங் யாதவ், மாயாவதி இருவரும் 80 தொகுதியில் போட்டியிட விரும்புகிறவர்களிடம் இருந்து விருப்ப மனுக்களை பெற்றுள்ளனர். தற்போது அந்த மனுக்களை அவர்கள் தீவிரமாக பரிசீலித்து வருகிறார்கள். ஒவ்வொரு தொகுதியிலும் யாரை வேட்பாளராக நிறுத்தலாம் என்பது பற்றி முலாயம்சிங் யாதவ் அடிமட்ட தொண்டர்கள் வரை கருத்துக்கள் கேட்டு ஆலோசனையை முடித்துவிட்டார். அதன் அடிப்படையில் அவர் வேட்பாளர்களை தேர்வு செய்துவிட்டார். இன்னும் சில தினங்களில் அவர் பாராளுமன்றத் தேர்தல் முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு தொகுதியிலும் தேர்தல் பணியை தொடங்கி பிரசாரத்தைத் தீவிரப்படுத்த முலாயம் சிங் தன் கட்சித் தொண்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். அடுத்த பிரதமர் பதவியை பி டிக்க வேண்டும் என்ற லட்சியத்துடன் இருக்கும் முலாயம்சிங் யாதவ் திட்டமிட்டு உத்தரபிரதேசத்தில் தேர்தல் பணியை தொடங்கி இருப்பது மற்ற கட்சித் தலைவர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முலாயம்சிங் யாதவுக்கு போட்டியாளராகத் திகழும் மாயாவதியும் முதல் கட்டமாக 60 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை தேர்வு செய்துள்ளார். விரைவில் அவரும் வேட்பாளர் பட்டியலை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மாநில கட்சிகள் தேர்தலுக்கு தாயராகி வருவதை அறிந்த பாரதீய ஜனதா தலைவர் நிதின்கட்காரி பாராளுமன்றத் தேர்தலுக்கு தயாராகும்படி தொண்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து மத்திய மந்திரி சபை மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகளை மாற்றம் செய்து விட்டு தேர்தல் பணியைத் தொடங்க காங்கிரஸ் தலைவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

Share this article :

Post a Comment

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger