திண்டிவனத்தில் கருணாநிதிக்கு வரவேற்பு: கடவுள் வேடத்தில் நடனம் நடவடிக்கை எடுக்க புகார் திண்டிவனத்தில் கருணாநிதிக்கு வரவேற்பு: கடவுள் வேடத்தில் நடனம் நடவடிக்கை எடுக்க புகார்
சென்னை, செப். 18- விழுப்புரத்தில் நடைபெற்ற தி.மு.க. முப்பெரும் விழா மாநாட்டையொட்டி திண்டிவனத்தில் பிரம்மாண்டமான வரவேற்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. மாநாட்டுக்கு வந்த தி.மு.க. தலைவர் கருணாநிதியை வரவேற்க இந்து கடவுள்கள் சிவன், பார்வதி, விநாயகர், முருகன் வேடமணிந்து நடன கலைஞர்கள் ஆடினார்கள். இது பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது. தமிழ்நாடு இந்து மகா சபா தலைவர ் ஸ்ரீகண்டன் போலீஸ் டி.ஜி.பி.யை சந்தித்து ஒரு புகார் மனு கொடுத்தார். அந்த மனுவில் கூறி இருப்பதாவது:- இந்துக்களை இழிவு படுத்தி வரும் நாத்திகவாதிகளை வரவேற்க இந்து கடவுள்கள் வேடமணிந்து கூத்தாட வைத்திருப்பது கண்டிக்கத்தக்கது. மத உணர்வுகளை புண்படுத்திய விழுப்புரம் மாவட்ட தி.மு.க. செயலாளர் பொன்முடி உள்ளிட்ட நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுà ��ில் கூறி உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்துக்களின் உணர்வுகளை சீண்டி பார்க்கிறார்கள். இந்துக்களை எதிர்த்து எந்த இயக்கமும் அரசியல் நடத்த முடியாது என்ற நிலையை உருவாக்குவோம். என்று கூறியுள்ளார். பா.ஜனதா தலைவர் இல.கணேசன் இதுகுறித்து கூறியதாவது:- கடவுள் வேடம் அணிந்தவர்களின் வரவேற்பை ஏற்று மகிழ்ந்ததன் மூலம் நாத்திகக் கொள்கை தோற்றுவிட்டது எà ��்பது மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இது தி.மு.க.வுக்கும் அதன் சுயமரியாதை கருத்துக்களுக்கும், நாத்திக கொள்கைகளுக்கும் ஏற்பட்ட பெருத்த அவமானம். இவ்வாறு அவர் கூறினார்.
Post a Comment