2020 ம் ஆண்டுக்குள் அணுமின் நிலையங்கள் மூலம் 20 ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி: மத்திய மந்திரி நாராயணசாமி 2020 ம் ஆண்டுக்குள் அணுமின் நிலையங்கள் மூலம் 20 ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி: மத்திய மந்திரி நாராயணசாமி
கோவை, செப். 18-
கோவையை அடுத்த பாலத்துறையில் உள்ள கலைவாணி தொழில் நுட்ப கல்லூரியில் இந்தியாவில் எரிசக்தி பாதுகாப்பு மற்றும் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்த கருத்தரங்கு நடந்தது. கருத்தரங்கிற்கு கல்லூரி செயலாளர் குமாரசாமி தலைமை தாங்கினார். தாளாளர் சி.கே.சுந்தரம் முன்னிலை வகித்தார். தலைவர் கிருஷ்ணசாமி வரவேற்று பேசினார். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மத்திய மந்திரி நாராயணசாமி கலந்து கொண்டு வினாடி-வினா போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி பேசியதாவது:-
நாட்டின் எரிசக்தி தேவை 2.45 லட்சம் மெகாவாட்டாக உள்ளது. நிலக்கரி மூலமாக 45 சதவீதம் அளவுக்கு மின்சார உற்பத்தி செய்யப்படுகிறது. ஆனால் சுற்று சூழல் முறைகேடு, அதிக செலவீனம் போன்றவை நிலக்கரி மின் உற்பத்தி சவாலாக உள்ளன. தூய்மையான, குறைந்த செலவுள்ளதாக அணுமின் உற்பத்தி உள்ளது. அணுமின் உற்பத்திக்கென அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ், தென்கொரியா நாடுகளுடன் ஒப்பந்தம் போடப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன.
வருகிற 2020-ம் ஆண்டுக்குள் அணுமின் நிலையங்கள் மூலம் 20 ஆயிரம் மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கூடங்குளத்தில் 300 கிலோ யுரேனியத்தை அணு உலையில் நிரப்புவதன் மூலமாக ஆயிரம் மெகாவாட் மின்சாரத்தை பெற முடியும். 12-வது ஐந்தாண்டு திட்டத்தில் 70 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
Post a Comment