பிரம்மோற்சவம் இன்று தொடக்கம்: திருப்பதியில் 22 ந் தேதி கருட சேவை பிரம்மோற்சவம் இன்று தொடக்கம்: திருப்பதியில் 22 ந் தேதி கருட சேவை
திருமலை, செப். 18-
திருப்பதி பிரம்மோற்சவ விழாவில் வருகிற 22-ந் தேதி கருட சேவை நிகழ்ச்சி நடக்கிறது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆண்டுதோறும் பிரம்மோற்சவ விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு 2 பிரம்மோற்சவ விழா நடக்கிறது. முதல் பிரம்மோற்சவ விழா இன்று (செவ்வாய் கிழமை) தொடங்குகிறது. மாலை 5.40 மணிக்கு தங்க கொடி மரத்தில் அர்ச்சகர்கள் கொடி ஏற்றுகிறார்கள். இ ரவு பெரிய சேஷவாகனத்தில் ஏழுமலையான் ஸ்ரீ தேவி, பூதேவியுடன் மாட வீதிகளில் வலம் வருகிறார். ஆந்திர முதல்-மந்திரி கிரண்குமார் ரெட்டி இன்று இரவு திருமலைக்கு வருகிறார். ஆந்திர அரசு சார்பில் பட்டு வஸ்திரத்தை தலையில் சுமந்து வந்து ஏழுமலையானுக்கு காணிக்கையாக செலுத்துகிறார். வருகிற 26-ந் தேதி வரை பிரம்மோற்சவ விழா நடக்கிறது. தினமும் காலை மாலையில் பல்வேறு வாகனங்களில் ஏழுமலைà ��ான் வீதி உலா வருகிறார். பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கருட சேவை வருகிற 22-ந் தேதி நடக்கிறது. 25-ந் தேதி தேரோட்டம் நடக்கிறது, 26-ந் தேதி சக்கரஸ்நானம் நடைபெறுகிறது. பிரம்மோற்சவ விழாவை யொட்டி பக்தர்களுக்கு வழங்க 4 லட்சம் லட்டுகள் தயார் நிலையில் உள்ளன. பிரம்மோற்சவ விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். அவர்களுக்கு வேண்டிய வசதிகளை தேவஸ்தான அதிகாரிகள் �® �ெய்து வருகின்றனர். பக்தர்களுக்கு 24 மணி நேரமும் இலவச சாப்பாடு, குடிநீர் வழங்கப்படுகிறது. திருமலையில் 4 மாட வீதிகளில் மருத்துவ மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. திருப்பதியில் இருந்து திருமலைக்கு 24 மணி நேரமும் பஸ்கள் இயக்கப்படுகிறது.
Post a Comment